இராமாநுச நூற்றந்தாதி திருமொழி – 3

(2813)

வைப்பாய வான்பொருள் என்று,நல்லன்பர் மனத்தகத்தே

எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில்

ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து

முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே!

விளக்க உரை

(2814)

மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்

எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்

பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்

கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே.

விளக்க உரை

(2815)

காரேய் கருணை இராமானுச,இக்கடலிடத்தில்

ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு

நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்

சீரே யுயிர்க்குயி ராய், அடியேற்கின்று தித்திக்குமே.

விளக்க உரை

(2816)

திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம்

மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர்

எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர்

அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே.

விளக்க உரை

(2817)

கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோங்கியவுன்

வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்

வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று

தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனிநெஞ்சமே!

விளக்க உரை

(2818)

நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்தநிமலன் நங்கள்

பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா

வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்

கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே!

விளக்க உரை

(2819)

கூட்டும் விதியென்று கூடுங்கொலோ,தென் குருகைப்பிரான்

பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்

வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்

ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே?

விளக்க உரை

(2820)

இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த

துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்

மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த

அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே.

விளக்க உரை

(2821)

ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே!

ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே

காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்

பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே.

விளக்க உரை

(2822)

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த

அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.

விளக்க உரை

(2823)

அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்

படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்

புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று

இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top