(2821)
ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே!
ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே.
பதவுரை
|
மனமே |
– |
நெஞ்சே! |
|
நூள் ஆய் |
– |
நாள்களாகவும் |
|
திங்கள் ஆய் |
– |
மாதங்களாகவும் |
|
ஆண்டுகள் ஆய் |
– |
வருஷ்ங்களாகவும் |
|
(இப்படி) |
||
|
நிகழ்காலம் எல்லாம் |
– |
நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும் |
|
ஈண்டு பல் யோனிகள் தோறும |
– |
திரண்டு பல்வகைப்பட்ட யோனிக்ள தோறும் |
|
உழல்வோம் |
– |
தட்டித்திரிந்த நாம் |
|
இன்று ஒர் எண் இன்றியே |
– |
இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா) |
|
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக்கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம் |
– |
கண்ணுரைக் காணத்தக்க தோள்களையுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப்பெற்றோம் (என்ன பாக்கியம்!,) |
English Translation
O Heart! For so many days, months, yeas and ages without end. we have gone through so many births in so many wombs. Today, without a second thought, we have fallen at the feet of Ramanuja who’s heart is filled with love for the benevolent-arms-Varadaraja, lord of Attigiri.
