(2821)

(2821)

ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே!

ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே

காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்

பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே.

 

பதவுரை

மனமே

–

நெஞ்சே!

நூள் ஆய்

–

நாள்களாகவும்

திங்கள் ஆய்

–

மாதங்களாகவும்

ஆண்டுகள் ஆய்

–

வருஷ்ங்களாகவும்

(இப்படி)

நிகழ்காலம் எல்லாம்

–

நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும்

ஈண்டு பல் யோனிகள் தோறும

–

திரண்டு பல்வகைப்பட்ட யோனிக்ள தோறும்

உழல்வோம்

–

தட்டித்திரிந்த நாம்

இன்று ஒர் எண் இன்றியே

–

இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா)

காண்  தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக்கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம்

–

கண்ணுரைக் காணத்தக்க  தோள்களையுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப்பெற்றோம் (என்ன பாக்கியம்!,)

 

English Translation

O Heart! For so many days, months, yeas and ages without end. we have gone through so many births in so many wombs.  Today, without a second thought, we have fallen at the feet of Ramanuja who’s heart is filled with love for the benevolent-arms-Varadaraja, lord of Attigiri.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top