தள அறிமுகம்
தள அறிமுகம்
அன்புடையீர்!
திராவிட வேதா எனும் இந்த தளத்தில் நாலாயிர திவ்வியபிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களும் அதற்குண்டான வியாக்கியனமும் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை , விளக்க உரை, ஆங்கில மொழி பெயர்ப்பு ஆகியவை கொடுக்கப் பட்டுள்ளன. விளக்க உரையாக ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமி அவர்களின் உரை வழங்கப் பட்டிருக்கிறது.
பிரபந்தங்கள் நான்கு ஆயிரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதற்பக்கத்தில் காணப்படும் நான்கு புத்தகங்களில் ஒன்றைச் சொடுக்கி உள் செல்லலாம்.
ஆழ்வார்களின் வைபவங்களும், ஆழ்வார்களின் தனியன்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள், பிரபந்தங்களின் அவதாரிகைகள் (முன்னுரைகள்), ஆழ்வார் படங்களுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
சில பாகவதர்களின் வேண்டுகோளிற்கிணங்க, பிரபந்தம் என்னும் தலைப்பில் ஆழ்வார் மற்றும் ஆச்ச்சார்யர்களின் திருநக்ஷத்ர சேவாக்காலங்கள் பாகவதர்கள் பதிவிறக்கம் செய்யக் கொடுக்கப்படவுள்ளன.
இந்தத் தளத்தின் மேலே வலது புறம் ஒரு தேடு பொறியும் அமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பாசுரத்தின் எண் அல்லது ஒரு வாக்கியம் அல்லது ஒரு வார்த்தை இப்படி ஏதாவது ஒன்றைக் கொண்டு தேடினால் அதற்கான பக்கங்களை, பாசுரங்களை சென்றடையலாம்.
இந்த தளத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் வண்ணம், 108 திவ்ய தேசங்களின் பட்டியல், ஆச்சார்ய பரம்பரை பற்றிய வரைபடம் போன்றவைகளும் வழங்கப் பட்டுள்ளன.
என்றும்போல் ஊங்களின் ஆதரவை நல்கி பயனுற ப்ரார்த்திகிறோம்.
மிக்க அன்புடன்
திரவிடவேதா தள நிர்வாகிகள்.