(2816)
திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை, என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும்நல்லோர்
எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே.
பதவுரை
|
என் செய்வினை ஆம் |
– |
என்னாலே செய்யப்பட்ட வினையாகிற |
|
மெய் குற்றம் நீக்கி |
– |
நிலைநின்ற தோஷங்களைப் போக்கி |
|
விளங்கிய |
– |
(இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோ மென்னாம் மகிழ்ச்சியாலே உஜ்வலரான |
|
மேகத்தை |
– |
பரம உதாரராய் |
|
திக்கு உற்ற கீர்த்தி |
– |
திசைகள் தோறும் விரிந்த புகழையுடையரான |
|
இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
|
மேவும் |
– |
பொருந்தியிருக்கின்ற |
|
நல்லோர் |
– |
விலக்ஷணர்கள் |
|
எக் குற்றவாளர் |
– |
யாதொரு குற்றத்தையுடையராகவும் |
|
எது பிறப்பு |
– |
யாதொரு ஜன்மத்தையுடையராகவும் |
|
எது இயல்பு ஆக |
– |
யாதொரு சரிதையையுடையவராகவும் |
|
நின்றோர் |
– |
முன்பு நின்றார்களோ, |
|
அக்குற்றம் |
– |
அந்தக் குற்றமும் |
|
அப் பிறப்பு |
– |
அந்த ஜன்மமும் |
|
அ இயல்வே |
– |
அந்த சரிதையுமே |
|
நம்மை |
– |
நம்மை |
|
ஆள் கொள்ளும் |
– |
அடிமைப்படுத்திக் கொள்ளவற்று. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ராமாநுஜ பக்தர்களுடைய ஜாதி முதலியவை ஏதாயினும் அவர்களெல்லாரும் அப்படியே நமக்கு உத்தேச்யர்கள் என்று காட்டியவாறு.
English Translation
The world renowned Ramanuja, benevolent as the rain cloud, purged me of the terrible misdeeds of my past, The godly ones who take refuge in him, -whatever be their birth or ancestry, whatever be their misdeeds, -will be our virtuous masters.
