(2817)

(2817)

கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோங்கியவுன்

வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்

வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று

தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனிநெஞ்சமே!

 

பதவுரை

இராமாநுச

–

எம்பெருமானாரே!

கொள்ள குறைவு அற்று இலங்கி

–

கொள்ளக்கொள்ளக் குறையாமல் தானே விளங்கி

கொழுந்துவிட்டு ஓங்கிய

–

மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான

உன் வள்ளல் தனத்தினால்

–

தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே

வல்வினையேன் மனம்

–

மஹாபாபியான எனது நெஞ்சிலே

நீ புகுந்தாய்

–

(தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று;

இது

–

(வஸிஷ்டின் சண்டான க்ருஹத்தில் புகுந்தாற்போலே) புகுந்தவிது,

வெள்ளை

–

பரிசுத்தமாய்

சுடர் விடும்

–

பரிசுத்தமாய் விளங்காநின்றுள்ள

உன் பெரு மேன்மைக்கு

–

தேவரீருடைய ப்ரபாவத்திற்கு

இழுக்கு என்று

–

அவத்யாவஹம் என்று

என் தனி நெஞ்சம்

–

எனது துணையற்ற நெஞ்சானது

தள்ளுற்று இரங்கும்

–

தளர்ந்து ஈடுபடா நின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்வாமிந்! தேவரீருடைய பெருமையையும் அடியேனுடைய சிறுமையையும் சிறிதும் பாராமல் “இவன் நம் அடியார் விஷயத்திலே சுபலனாயிரப்பானொருவன்” என்கிற இவ்வளவையே கொண்டு பாபிஷ்டமான என் ஹ்ருதயத்திலே தேவரீர் புகுந்தளிற்று: வஸிஷ்டன் சண்டாளர் மனையிற் புகுந்தாற்போல் தேவரீர் என் நெஞ்சில் புகுந்த விது, தேவரீருடைய பரிசுத்தமாய் விளங்கும் மஹிமைக்கு என்ன அவத்யத்தை விளைத்திடுமோவென்று அஞ்சாநின்றேன்,

 

English Translation

O Ramanuja! With a grace never disminishing in radiance but ever increasing in power, your dark-cloud like benevolence has entered and captivated my heart.  The silver lining on your greatness is not a blemish, yet I fear it in my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top