(2818)
நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்தநிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணா
வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்
கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே!
பதவுரை
|
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை |
– |
நெஞ்சிலே கல்மிஷத்தையுடை யனாயிருந்த கம்ஸனை |
|
காய்ந்த |
– |
முடித்த |
|
நிமலன் |
– |
ஹேயப்ரத்ய நீகனாய், |
|
நங்கள் பஞ்சி திருவடி |
– |
ஆச்ரிதர்பக்கல் அபிமாநமுடையளாய் பஞ்சு போல் மெல்லிய திருவடிகளையுடையளான |
|
பின்னைதன் காதலன் |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனான கண்ணபிரானாடைய |
|
பாதம் நண்ணு |
– |
திருவடிகளை ஆச்ரயியாத |
|
வஞ்சர்க்கு |
– |
ஆத்மாபஹாரக் கள்வர்களுக்கு |
|
அரிய |
– |
துர்லபரான |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
|
புகழ் அன்றி |
– |
குணங்களை யொழிய (மற்றொன்றை) |
|
என் வாய் |
– |
என் வாக்கானது |
|
கொஞ்சிபரவகில்லாது |
– |
குலாவி எத்தமாட்டாது; |
|
இன்று கூடியது வாழ்வு |
– |
இன்று (எனக்கு) நேர்ந்த வாழ்ச்சியானது |
|
என்ன |
– |
ஆச்சரியமானது |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நேற்றுவரை அபதார்த்தமாய்க் கிடந்த அடியேன் இன்று ஸத்தை பெற்றுவாழ்ந்த அதிசயம் சொல்லி முடியுமோ? இன்று உமக்குவந்த அதிசயம் என்னவென்று கேட்கிறீர்களோ? எம்பெருமானாருடைய குண கீர்த்தநத்தில் நேற்றுவரை உதாஸீநமாய்க்கிடந்த என் வாயானது இன்று அவருடைய திவ்ய கீர்த்திகளையன்றி வேறொன்றையும் அநுசந்திக்கமாட்டேனென்று அதுதன்னிலே அதுதன்னிலே ஊன்றிக் கிடக்கிறதே, இதைவிட அதிசய முண்டோ? என்கிறார்.
English Translation
Ramanuja is hard to get for the ill-minded people who do not worship the petal-soft feet of the pure lord Kirshna, -Dame Nappinal’s lover and the evil-hearted Kamsa’s killer. Other than his name, my heart sings and prates of none else. O, what a blessing in my life has happened to me!
