(2817)
கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோங்கியவுன்
வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்
வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனிநெஞ்சமே!
பதவுரை
|
இராமாநுச |
– |
எம்பெருமானாரே! |
|
கொள்ள குறைவு அற்று இலங்கி |
– |
கொள்ளக்கொள்ளக் குறையாமல் தானே விளங்கி |
|
கொழுந்துவிட்டு ஓங்கிய |
– |
மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான |
|
உன் வள்ளல் தனத்தினால் |
– |
தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே |
|
வல்வினையேன் மனம் |
– |
மஹாபாபியான எனது நெஞ்சிலே |
|
நீ புகுந்தாய் |
– |
(தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று; |
|
இது |
– |
(வஸிஷ்டின் சண்டான க்ருஹத்தில் புகுந்தாற்போலே) புகுந்தவிது, |
|
வெள்ளை |
– |
பரிசுத்தமாய் |
|
சுடர் விடும் |
– |
பரிசுத்தமாய் விளங்காநின்றுள்ள |
|
உன் பெரு மேன்மைக்கு |
– |
தேவரீருடைய ப்ரபாவத்திற்கு |
|
இழுக்கு என்று |
– |
அவத்யாவஹம் என்று |
|
என் தனி நெஞ்சம் |
– |
எனது துணையற்ற நெஞ்சானது |
|
தள்ளுற்று இரங்கும் |
– |
தளர்ந்து ஈடுபடா நின்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்வாமிந்! தேவரீருடைய பெருமையையும் அடியேனுடைய சிறுமையையும் சிறிதும் பாராமல் “இவன் நம் அடியார் விஷயத்திலே சுபலனாயிரப்பானொருவன்” என்கிற இவ்வளவையே கொண்டு பாபிஷ்டமான என் ஹ்ருதயத்திலே தேவரீர் புகுந்தளிற்று: வஸிஷ்டன் சண்டாளர் மனையிற் புகுந்தாற்போல் தேவரீர் என் நெஞ்சில் புகுந்த விது, தேவரீருடைய பரிசுத்தமாய் விளங்கும் மஹிமைக்கு என்ன அவத்யத்தை விளைத்திடுமோவென்று அஞ்சாநின்றேன்,
English Translation
O Ramanuja! With a grace never disminishing in radiance but ever increasing in power, your dark-cloud like benevolence has entered and captivated my heart. The silver lining on your greatness is not a blemish, yet I fear it in my heart!
