(2819)
கூட்டும் விதியென்று கூடுங்கொலோ,தென் குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்
வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே?
பதவுரை
|
தென் குருகை பிரான் |
– |
நம்மாழ்வாருடைய |
|
பாட்டு என்னும் |
– |
பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய் |
|
வேதம் |
– |
வேதரூபமாய் |
|
பசும் தமிழ்தன்னை |
– |
செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை |
|
தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த |
– |
தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
|
புகழ் |
– |
கல்யாண குணங்களை |
|
மெய் உணர்ந்தோர் |
– |
உள்ளபடி அறிந்திருக்கு மவர்களுடைய |
|
ஈட்டங்கள் தன்னை |
– |
கோஷ்டிகளை |
|
என் நாட்டங்கள் கண்டு |
– |
என் கண்களானஸ்வ ஸேவித்து |
|
இன்பம் எய்திட |
– |
ஸூகிக்கும் படியாக |
|
கூட்டும் விதி |
– |
அமைக்கவல்ல (அவருடைய) க்ருபையானது |
|
என்று கூடுங்கொவ் |
– |
என்றைக்கு வாய்க்குமோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நம்மாழ்வா ரருளிச்செய்த தமிழ் வேதத்தைப் பத்தியுடன் பரவும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை உள்ளபடி உணர்ந்து ஈடுபட்டிருக்கும் மஹான்களுடைய சேஷ்டிகளை அடியேன் ஸேவித்து ஆநந்திக்கும் படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.
தன்பத்தி யென்னும் வீட்டின்கண் வைத்த = விலையுயர்ந்த மாணிக்கத்தைச் செப்பிலே வைத்துக் கொண்டிருப்பாரைப்போலே அநர்க்கமான அருளிச்செயலைத் தம்முடைய பக்தியாகிற உயர்ந்த மாளிகையிலே வைத்துப் பேணிக் கொண்டிராநின்ற உடையவர் என்றபடி. நாட்டம் – கண்.
English Translation
Ramanuja firmly established the Bhakti path, in which the famed Tamil Vedas, -the sweet songs of Southern Kurugar city’s king, -are the means of union with the divine. O when will my eyes rejoice and see bands of devotees who realise the truth in this!
