(2820)

(2820)

இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலென்? எண்ணிறந்த

துன்பந் தருநிர யம்பல சூழிலென்? தொல்லுலகில்

மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன் எனமொழிந்த

அன்பன் அனகன் இராமா னுசனென்னை ஆண்டனனே.

 

பதவுரை

தொல் உலகில்

–

‘அநாதியான இவ்வுலகத்தில்

மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின்

–

நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’

என மொழிந்த

–

என்று (=பாஷ்ய முகத்தாலே) அருளிச்செய்த

அன்பன்

–

பரமகாருணிகராய்

அனகன்

–

நிர்த்தோஷரான

இராமாநுசன்

–

எம்பெருமானார்

என்னை ஆண்டனன்

–

என்னை அடிமைகொண்டருளினார்;

(ஆனபின்பு)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்

–

ஆநந்தாவஹமான மோக்ஷம்வந்து ஹித்தித்தாலெனன?

எண்  இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என்

–

அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்துகொண்டால்தான் என்ன?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானார் என்னை அடிமைகொண்டருளப்பெற்றபின்பு எனக்கு மோக்ஷம் கிடைத்தாலென்ன? பலபல நரகங்கள் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்து விட்டது! சரக்கறப் பேசுகிறார்.

நிரயம்-வடசொல். அனகன்-வடசொல் வகாரம்:ஹேய ப்ரதிபடர் என்றபடி.

 

English Translation

Ramanuja, the faultiess one, the friend, discoursed that the wonder-Lord Krishna is the Lord of all beings in the Universe.  He became my heart’s master, Now, how does it matter whether I enjoy the pleasures of heaven or suffer the pains of hell?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top