(2813)

(2813)

வைப்பாய வான்பொருள் என்று,நல்லன்பர் மனத்தகத்தே

எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில்

ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து

முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே!

 

பதவுரை

நல் அன்பர்

விலக்ஷண பக்தியுடையவர்கள்

வைப்பு ஆய வான் பொருள் என்று

“எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத்ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு

இராமாநுசனை

எம்பெருமானாரை

இரு நிலத்தில்

இந்தப்பெரியவுலகத்திலே

ஒப்பார் இலாத உறு வினையேன்

ஒப்பற்ற மஹாபாபியான அடியேன்

வஞ்சம் நெஞ்சில் வைத்து

(என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே  வைத்து

முப்போதும் வாழ்த்துவன்

ஸர்வகாலமும் எத்த நின்றேன்;

இது

மிகப்பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது

அவன்

அவ்வெம்பெருமானானாருடைய

மொய் புகழ்க்கு

சிறந்த கீர்த்திக்கு

என் ஆம்

என்னாகுமோ? (அவத்யமமோ?)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “வளவேழுலகின் முதலாய” என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் நைச்யாநு ஸந்தானம் பண்ணினது போல, இப்பாட்டில் இவ்வமுதனாரும் நைச்யாநுஸந்தாநம் பண்ணுகிறார்;.

 

English Translation

The godly ones always vault Ramanuja in their hearts as their precious wealth.  I, this self, sinful without a peer in this whole world, with my deceitful hard heart, have dared to sing his praise.  Even if I sing all morning, evening and night, will never exhaust his infinite virtues?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top