(2812)
கார்த்திகை யானும் கரிமுகத் தானும் கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த
தீர்த்தனை யேத்தும் இராமா னுசனென்றன் சேமவைப்பே.
பதவுரை
|
கார்த்திகையானும் |
– |
ஸுப்ரஹமண்யனும் |
|
கரிமுகத்தானும் |
– |
கணபதியும் |
|
கனலும் |
– |
(அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும் |
|
முக்கண்மூர்க்தியும் |
– |
சிவனும் |
|
மோடியும் |
– |
துர்க்கையும் |
|
வெப்பும் |
– |
ஜ்வரதேவதையும் |
|
முதுகு இட்டு |
– |
முதுகுகாட்டி ஒடிப்போன பின்பு (அநந்யகதியான பாணாஸுரனானவன் |
|
மூ உலகும் பூத்தவனே என்று போற்றிட |
– |
“மூன்று உலகங்களையும் திருநாபிக் கமலத்திலே உண்டாக்கினபெருமானே!” (என்னைக்காத்தருள்) என்று போற்ற |
|
வாணன் பிழை பொறுத்த |
– |
(அந்த) பாணாஸுரனுடைய அபராத்தை க்ஷமித்தருளின |
|
தீர்த்தனை |
– |
பாவநனான ஸர்வேச்வரனை |
|
ஏத்தும் |
– |
நித்யம் துதிக்கின்ற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
என் தன் சேமவைப்பு |
– |
எனக்கு ஆபத்தநம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஐச்வர்யம் சங்கராதிச்சேத் ஆரோக்யம் பாஸ்கராத் ததா சிவன் பக்கல் செல்வம்பெற விரும்ப வேண்டும்; ஸூர்யன் பக்கல் ஆரோக்யம் பெற விரும்ப வேண்டும்) என்று ஸாமாந்யமாகச் சிலர் சொல்லுவதுண்டே; அதனைக்கொண்டு ஒருவன் அமுதனாரை நோக்கி ‘ஒய்! நீர் எம்பெருமானாரைப் பற்றினால் உம்முடைய தாரித்ரியம் நீங்குமோ? சிவனைப் பற்றினாலன்றே செல்வம் மிகும்’ என்றுகூட அந்தச் சிவன்பட்ட பரிபவங்களை விளக்கும் ஒரு இதி ஹாஸத்தைப் பரக்கப்பேசிக் கொண்டு, ‘எம்பெருமானார் தாம் தமக்கு ஆபத்தனம்’ என்கிற திண்ணிய அத்யவஸாயத்தை உறுத்திக் கூறுகின்றார் இதில்.
English Translation
Subramanya, Vinayaka, Siva, Parvali, Agni and all the other gods turned their backs and fied, then hailed, “O Lord of the three worlds, O Maker!” such was the mercy that Krishna showed on Sana, Ramanuja, who worships him, is our Provident Fund.
2812