(2814)

(2814)

மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்

எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்

பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்

கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே.

 

பதவுரை

முன நாள்கள் எல்லாம்

–

கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம்

பல்உடல் தொறும்

–

பலபல சரீரங்கள் தோறும்

மொய்த்த வெம் தீ வினையால் மூத்து

–

ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதிக்ரூரமான கர்மத்தாலே கிழத்தனம் வருமளவும் வாஸஞ்செய்து

அதனால்

–

அத்தாலே

எய்த்து ஒழிந்தேன்

–

மிக்க பரிதாப மடைந்தேன்;

பொய்தவம் போற்றும் புலைச் சமயங்கள்

–

கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள்

நிலத்து அவிய

–

இந்நிலவுலகத்திலே வோற்றொழியும்படி

கைத்த

–

நிரஸித்தருளின

மெய் ஞானத்து

–

உண்மைஞான முடையரான

இராமாநுசன் என்னும் கார்தன்னை

–

எம்பெருமானாராகிறகாள மேகத்தை

இன்று கண்டு

–

இன்று அடியேன் ஸேவிக்கப்பெற்று

உயர்ந்தேன்

–

சிறந்தவனானேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெடுநாளாக ஸம்ஸாரத்திலிருந்து பலபல கருமங்களைப்பண்ணி, அக்கருமங்களின் பலனாகப் பலபல பிறவிகளிற் பிறந்து படாதனபட்டு இப்படியாகவே அநேக பர்யாயம் அவஸந்நனாய்க் கிடந்தேன் நான்; இப்பொழுது பரம உதாரான எம்பெருமானார் இப்பூமியிலவதரித்துப் பல துர்மதங்களை வெறுத்தொழித்ததுபோல எனது கருமங்களையும் வேரறுத்தொழித்துத்  தம்முடைய நிர்ஹேதுக்கக் ருபையாலே தம்மைக் காட்டியருளக் கண்டு கிருதார்த்தனானேனென்கிறார்.

பொய்த்தலும் போற்றும் புலைச்சமயங்கள் = ராவண ஸம்ந்யாஸம், காலநேமிஜபம் முதலியவை போலே மதாந்தரஸ்தர்கள் க்ருத்ரிமமான ஆசாரங்களை அனாட்டிப்பார்களென்க. மெய்ஞ் ஞானத்திராமாநுசன் – “யதார்த்தம ஸர்வவிஜ்ஞர்நம்”என்று ஸ்தாபித்தருளினவர்

 

English Translation

Those were days when, by the terrible deeds of sin committed, I took countless births, aged and tired.  Now I have seen Ramanuja, pleasing like the dark cloud, and am saved, for the weeds out the lowly paths of false penance.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top