(2823)
அடையார் கமலத் தலர்மகள் கேள்வன் கை யாழியென்னும்
படையொடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்
புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே.
பதவுரை
|
அடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன் |
– |
தளங்கள் நெருங்கிய தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வில்லபனான எம்பெருமானுடைய |
|
கை ஆழி என்னும் படையோடு |
– |
திருக்கையிலே (விளங்கா நின்ற திருவாழியென்கிற திவ்யாயுதத்தோடே |
|
நாந்தகமும் |
– |
நந்தகவாளும் |
|
படர் தண்டும் |
– |
ரக்ஷணத்தொழிலிலே பரந்திராநின்ழ கதையும் |
|
ஒண் சார்ங்கம் வில்லும் |
– |
அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும் |
|
புடை ஆர் புரி சங்கமும் |
– |
ஒருபக்கத்துக்குத்தானே ஆபரணமாகப் போரும்படியான அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யமும் (ஆக இப் பஞ்சாயுதாழ்வார்கள்)இந்த பூதலம் காப்பதற்கு என்று |
|
இந்தப் பூமியை ரக்ஷிக்கைக்காக இந்நிலத்து |
– |
இப்பூமண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின |
|
எம்பெருமானார் பக்கலிலே ஆயினர் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களும் லோகரக்ஷணுர்த்தமாக எம்பெருமானார் பக்கலிலேவந்து குடி கொண்டனர் என்கிறார் இப்பாட்டில்.
“அடையார் + புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்தே இராமாநுச முனியிடையே ஆயின” என்று அந்வயித்தவாறு. ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்கள் இவர்ப்பக்கலிலே ஆகையாவது – இவருடைய நினைவைக் கடாக்ஷித்து நின்று இவர் அதிகரித்த காரியத்திற்குத் துணைசெய்கையாம். அமபரீஷனாக்குத் திருவாழியாழ்வான் ஸஹகரித்தது போல.
இப்பாட்டை மற்றொரு வகையாகவும் அந்வயிக்க இடமுண்டு:- அடையார் +புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்திடையே இராமாநுசமுனியாயின” என்று இப்பக்ஷத்தில் ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களே இந்நிலவுலகைக் காக்க எம்பெருமானாராக வந்து திருவவதாரித் தார்க ளென்றதாகிறது.
இப்பாட்டினால், எம்பெருமானார் பஞ்சாயுதாழ்வார்களுடைய திருவவதாரமென்று விளங்கா நன்றமையால் திருவனந்தாழ்வானாடைய அவதாரமென்று சொல்வது எங்ஙனே? என்று சங்கிக்கு மவர்கள் நமது சேஷாவதாரச்
English Translation
The Lord of lotus-dame Lakshmi wields the discus sudarsana, the dagger Nandaki, the mace kaumodaki, the bow sarnga, and the dextral conch Panchajanya. To protect the good, they have come into this world in the form of a Muni called Ramanuja.
