(2815)

(2815)

காரேய் கருணை இராமானுச,இக்கடலிடத்தில்

ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு

நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்

சீரே யுயிர்க்குயி ராய், அடியேற்கின்று தித்திக்குமே.

 

பதவுரை

கார் எய் கருணை இராமாநுச!

மேகத்தையொத்த கருணையையுடைய எம்பெருமானாரே!

நான்

அடியேன்

அல்வலுக்கு நேரே உறைவு இடம்

துக்கங்களுக்கு நேரே வாஸஸ்தானமாயிருப்பவன்;

என்னை

இப்படிப்பட்ட அடியேனை

நீ வந்து உற்றபின்

ஸ்வீகரித் தருளின பின்பு

உன் சீரே

தேவரீருடைய கல்யாண குணங்களே

உயிர்க்கு உயிர் ஆய்

ஆத்மாவுக்கு தாரகமாய்

அடியேற்கு

அடியேனுக்கு

இன்று தித்திக்கும்

இன்றுரஸியா நின்றது;

நின் அருளின் தன்மை

தேவரீருடைய க்ருபையின் ஸ்வபாவத்தை

இ கடல் இடத்தில்

கடல்சூழ்ந்த இப் பூ மண்டலத்தில்

ஆரே அறிபவர்

அறியக் கூடியவர்கள் ஆருமில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஜலஸ்தலவிபாகம் பாராமல் ஸர்வத்ர ஸமமாக வர்ஷிக்கின்ற மேகம்போலலே, தாழ்ந்தோர்  உயர்ந்தோர் என்னும்  வாசிபாராமல் எல்லார்திறத்தும் அருள் புரிகின்ற எம்பெருமானாரே! மிகக் கொடிய துக்கங்களுக்கெல்லாம் இருப்பிடமான என்னை தேவரீர் தாமேவந்து விஷயீகரித்தபின்பு தேவரீருடைய திருக்கல்யாண குணங்களே எனக்குப் பரமபோக்யமாய்  ஆத்மதாரகமுமாய்விட்டது. தேவரீக்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர் என்னுமிடத்தை இவ்வுலகில் உள்ளபடியே ஒருவருமறியார்கள்.

 

English Translation

O Ramanuja, Benevolent as the dark cloud! Who in this wide world can understand the nature of your grace? I was the very hotbed of sin. On your own, you came and accepted me, Today your noble qualities are sweet as ambrosia to my lowly self’s soul.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top