மூன்றாந் திருவந்தாதி திருமொழி – 4

(2312)

இவையவன் கோயில் இரணியன தாகம்,

அவைசெய் தரியுருவ மானான், – செவிதெரியா

நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்

பாகத்தான் பாற்கடலு ளான்.

விளக்க உரை

(2313)

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,

நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், – பாற்பட்

டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,

குருந்தொசித்த கோபா லகன்.

விளக்க உரை

(2314)

பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்

மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, – மாலவ

மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்

அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.

விளக்க உரை

(2315)

அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,

நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், – அன்று

கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்

கடந்தானை நெஞ்சமே காண்.

விளக்க உரை

(2316)

காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு

பூண்டார் அகலத்தான் பொன்மேனி, – பாண்கண்

தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்

கழல்பாடி யாம்தொழுதும் கை.

விளக்க உரை

(2317)

கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,

வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய

படைபரவ பாழி பனி நீ ருலகம்,

அடியளந்த மாயன் அவற்கு.

விளக்க உரை

(2318)

அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,

உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்

பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,

திகழும் திருமார்வன் தான்.

விளக்க உரை

(2319)

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,

தானே தவவுருவும் தாரகையும், – தானே

எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்

திருசுடரு மாய இறை.

விளக்க உரை

(2320)

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,

மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த

வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,

உள்ளத்தி னுள்ளே உளன்.

விளக்க உரை

(2321)

உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்

உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,

விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான்,

மண்ணெடுங்கத் தானளந்த மன்.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top