(2317)

(2317)

கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,

வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய

படைபரவ பாழி பனி நீ ருலகம்,

அடியளந்த மாயன் அவற்கு.

 

பதவுரை

பனி நீர் உலகம்

குளிர்ந்த நீரையுடைய கடல்சூழ்ந்த உலகங்களை

அடி

தனது திருவடியினாலே

அளந்த

அளந்துகொண்ட

மாயர் அவர்க்கு

ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு

கனல் ஆழி

திக்ஷ்ணமான சக்கரமும்

கார் கடல் வாய் வெண் சங்கம்

கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்

வெண்ண

வெவ்விதான

கதை

கதையும்

சார்ங்கம்

சார்ங்கமும்

வெம் சுடர்வாள்

வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய

செய்ய படை

அழகிய இவ்வாயுதங்கள்

கைய

திருக்கையிலுள்ள,

பரவை

கடலானது

பாழி

படுக்கையாயிருக்கின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானை அநுபவிக்கிறார். திருவாழி திருச்சங்கு முதலிய பஞ்சாயுதாழ்வார்கள் திருக்கைகளிலே விளங்குகின்றனர். திருப்பாற்கடல் படுக்கையாக அமைந்திருக்கின்றது. இவை ஆர்க்கு? என்றால், பனிநீருலக மடியளந்த மாயரவர்க்கு.

 

English Translation

When the feet of the wonder Lord strode the Earth, his beautiful weapons, the fiery discus, the white conch, the heavy mace, the dark bow, the shining dagger, -they also grew with him.  Even the ocean-bed grew with the lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top