(2316)
காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, – பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை.
பதவுரை
|
கண்கள் |
– |
என்னுடைய கண்களானவை |
|
கதிர் இலகு |
– |
ஒளிவிளங்கா நின்றுள்ள |
|
பூண் |
– |
திவாபணங்களையும் |
|
தார் |
– |
மாலையையும் |
|
அகலத்தான் |
– |
திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய |
|
பொன்மேணி |
– |
அழகிய திருமேனியை |
|
காண் காண் என விரும்பும் |
– |
காணவேணுங் காணவேணுமென்று ஆசைப்படாநின்றன. |
|
வண்டு |
– |
வண்டுகளானவை |
|
பாடி |
– |
இசைப்பாடிக்கொண்டு |
|
அறையும் |
– |
ஒலிசெய்யப்பெற்ற |
|
தொங்கலான் |
– |
மாலையை யுடையனான அப்பெருமானுடைய |
|
தொழில் |
– |
சேஷ்டிதங்களை |
|
பாண் கண் பாடி |
– |
ராகத்திலே அமைத்துப்பாடி |
|
யாம் |
– |
நாம் |
|
கை |
– |
கைகளினாலே |
|
செம் பொன் கழல் தொழுதும் |
– |
சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகத்தாருடைய இந்திரியங்களிற்காட்டில் என்னுடைய இந்திரியங்கள் மிகச்சிறந்தவை யென்கிறார். உலகத்தாருடைய இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவிப்பதிற்செல்லுகின்றன. அங்ஙனன்றியே என்னுடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்திலேயே ஊன்றியிருக்கின்றன வென்கிறார். கண்களோ திருவாபரணங்களாலும் திருமாலைகளாலும் அழகுபெற்றுள்ள எம்பெருமானது பொன்மேனியைக் காண்பதற்கே பாரித்திருக்கின்றன. வாயோ அவனுடைய திவ்பசரித்திரங்களைப் பாடுவதிலேயே ஊற்றமுற்றிருக்கின்றது, கைகளோ அவனுடைய திருவடிகளைத் தொழவே காதல் கொண்டிருக்கின்றன என்றாராயிற்று.
English Translation
The lord wears radiant necklaces on his wide chest, “Oh, see, see!”, crave my eyes, Bees that hum on his Tulasi-garland sing his praise in beautiful panns. My heart too desires to sing like, them while my hands desire to worship his geet.
