(2315)
அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், – அன்று
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்.
பதவுரை
|
நெஞ்சமே |
– |
மனமே! |
|
அன்று |
– |
முன்பொரு காலத்தில் |
|
நின்று |
– |
நின்றுகொண்டே |
|
இவ்வுலகம் |
– |
இவ்வுலகங்களையெல்லாம் |
|
அளந்த |
– |
அளந்ததனாலுண்டான |
|
அசவே கொல் |
– |
சிரமத்தினாலேயோ |
|
வேளுங்கை |
– |
திருவேளுக்கையிலே |
|
இருந்து |
– |
வீற்றிருந்து |
|
நீள் நகர் வாய் |
– |
(திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில் |
|
அன்று |
– |
ஒரு காலத்தில் கிடந்தானை |
|
பள்ளி கொண்டவனும் |
||
|
கேடு இல் சீரானை |
– |
ஒரு காலு மழிவில்லாத திருக்குணங்களையுடையவனும் |
|
முன் |
– |
முன்னொருகால் கம்ஸனை |
|
கடந்தானை |
– |
கொண்டுறொழித்தவனுமான பெருமானை |
|
காண் |
– |
ஸேவி |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான் ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார். “நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில்கூட்டி உரைக்கப்பட்டது. நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம்.
அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம்.
“கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.
English Translation
Did your feet, -that stretched into the sky, -grow fired? O Heart! See, the Lord is sitting in Velukkai, and reclining in Venkai Contemplate him. He is the kamsa-killer lord.
