(2315)

(2315)

அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,

நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், – அன்று

கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்

கடந்தானை நெஞ்சமே காண்.

 

பதவுரை

நெஞ்சமே

–

மனமே!

அன்று

–

முன்பொரு காலத்தில்

நின்று

–

நின்றுகொண்டே

இவ்வுலகம்

–

இவ்வுலகங்களையெல்லாம்

அளந்த

–

அளந்ததனாலுண்டான

அசவே கொல்

–

சிரமத்தினாலேயோ

வேளுங்கை

–

திருவேளுக்கையிலே

இருந்து

–

வீற்றிருந்து

நீள் நகர் வாய்

–

(திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில்

அன்று

–

ஒரு காலத்தில் கிடந்தானை

பள்ளி கொண்டவனும்

கேடு இல் சீரானை

–

ஒரு காலு மழிவில்லாத திருக்குணங்களையுடையவனும்

முன்

–

முன்னொருகால் கம்ஸனை

கடந்தானை

–

கொண்டுறொழித்தவனுமான பெருமானை

காண்

–

ஸேவி

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான் ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார். “நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில்கூட்டி உரைக்கப்பட்டது. நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம்.

அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம்.

“கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.

 

English Translation

Did your feet, -that stretched into the sky, -grow fired? O Heart! See, the Lord is sitting in Velukkai, and reclining in Venkai Contemplate him.  He is the kamsa-killer lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top