(2319)

(2319)

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,

தானே தவவுருவும் தாரகையும், – தானே

எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்

திருசுடரு மாய இறை.

 

பதவுரை

எவ் உருவும்

எல்லாப் பொருள்களும்

தன் உருவே

அவன்றனக்கு சரீரமாகவேயிருக்கும்,

தவம் உருவும்

தபஸ்ஸுபண்ணிப் புண்யசரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்

தாரகையும்

நக்ஷத்ரங்களும்

தானே

அவன்றன் வடிவாகவேயிருக்கும்,

எரி சுடரும்

ஜ்வலிக்கின்ற அக்நியும்

மால் வரையும்

பெரிய குலபர்வதங்களும்

எண் திசையும்

எட்டு திக்குகளும்

அண்டத்து

மேலுலகிலுள்ள

இரு சுடரும்

சந்த்ரஸூர்யர்களும்

தானே ஆய இறை

தனக்கு ப்ரகாரமாயிருக்கப்பெற்ற எம்பெருமான்

தனக்கு தானே உவமன்

(ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் பலவடிவுகொண்டு தம்மை அநுபவிக்க விரும்புவதாகக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார். அவன் ஒரு ஸரமாந்ய புருஷனல்லன், ஒப்புயர்வற்ற புருஷோர்த்தமன் காண்மின் என்கிறாரிப்பாட்டில். உலகத்திலுள்ள ஸகலபதார்த்தங்களும் அவனுக்கு சரீரபூகங்களாய் எல்லாவற்றுக்கும் அவன் சரீரியாய் இருப்பவனாகையாலே அவனோடு ஒப்புச் சொல்லலாவதொரு பொருள் இல்லை, அவனுக்கு அவன்றானே உவமை என்கிறார் இது, அநந்வயாலங்காரம்.

 

English Translation

He is all things that exist. The penance-performing Rishis, the stars, the bright fire, the mountains, the eight Quarters, the twin orbs, -all these are he.  He alone is his lord and equal

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top