(2314)

(2314)

பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்

மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, – மாலவ

மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்

அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.

 

பதவுரை

மேல் ஒரு நாள்

–

முன்னொரு காலத்தில்

பாலகன் ஆய்

–

சிறு குழந்தை வடிவமுடையனாகி

ஆல் இலை மேல்

–

ஆலந்தளிரிலே

உலகு எல்லாம்

–

உலகங்களையெல்லா

பைய

–

மெல்ல

மெய்ம்மெயே

–

உண்மையாகவே

உண்டவனே

–

அமுதுசெய்து கிடந்தவனே!

மாலவனே

–

ஸர்வாதிகளே!

நீ

–

இப்படிப்பட்ட நீ,

அன்று

–

அன்றொருநாள்

மந்தரத்தால்

–

மந்தரமலையைக்கொண்டு

மா நீர கடல் கடைந்து

–

மிக்க நீரையுடைய கடலைக் கடைந்து

வான் அமுதம்

–

திவ்யமான அமிருதத்தை

அந்தரத்தார்க்கு

–

தேவர்களுக்கு

ஈந்தாய்

–

அளித்தாய்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அநிஷ்டங்களைத் தவிர்ப்பதும் இஷ்டங்களை அளிப்பதுமாகி ரக்ஷணத்தைச் செய்யவல்லவன் எம்பெருமானே என்கிறது. இதில் மூன்னடிகளால் அநிஷ்டத்தைத் தவிர்த்தமையும் பின்னடிகளால் இஷ்டங்களை அளித்தமையும் சொல்லிற்று. பிரளயம் கொள்ளை கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றில் வைத்தது – அநிஷ்ட நிவாரணம். மந்தரத்தால் கடல்கடைந்து வானவர்க்கு அமுதளித்தது இஸ்டப்ராபணம்.

 

English Translation

O True Lord! In the yore you swallowed all the worlds, then slept as a child on a floating fig leaf. O Adorable Lord! You churned the ocean with a mountain and gave ambrosia to the gods in the sky.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top