(2313)

(2313)

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,

நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், – பாற்பட்

டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,

குருந்தொசித்த கோபா லகன்.

 

பதவுரை

குருந்து

குருந்த மாத்தை

ஒசித்த

முறித்தொழித்த

கோபாலகன்

கண்ணபிரான்

பால் கடலும்

திருப்பாற் கடலையும்

வேங்கடமும் திருமலையையும்

பாம்பும்

திருவனந்தாழ்வானையும்

பனி விசும்பும்

(ஸம்ஸாராதாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும்

நூல் கடலும்

கடல்போன்ற சாஸ்த்ரங்களையும்

துண் நூல தாமரை மேல்பால்பட்டிருந்தார் மனமும்

ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும்

இடம் ஆக கொண்டான்

வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டிலும் எம்பெருமானிருப்பிடங்களைச் சொல்லுகிறார். திருப்பாற்கடல் திருவேங்கடம் திருவனந்தாழ்வான் ஸ்ரீவைகுண்டம் வேதவேதாங்கங்கள் யோகிகளின் உள்ளக் கமலம் ஆகிய இவற்றை இருப்பிடமாகக் கொண்டவனென்றாராயிற்று.

பனிவிசும்பு – ஸம்ஸாரத்தில் பட்ட தாபங்களையெல்லாம் ஆற்றிக் குளிரப்பண்ணும் பரமபதம் என்கை. நூற்கடல் – கடல் போன்றிருக்கிற ச்ருதிஸ்மிருதி இதிஹாஸம் புராணம் முதலிய சாஸ்த்ரங்கள்.

(நுண்ணூல தாமரையித்யாதி) “***“ என்று வேதத்திற் சொல்லப்பட்ட யாதொரு தாமரையுண்டு – ஹ்ருதயகமலம், அதிலே ஸமஸ்த கரணங்களும் ப்ரவணமாம்படி யோகத்தில் ஊன்றியிருக்கிற பரம யோகிகளுடைய மநஸ்ஸைச் சொன்னபடி. “***“ என்ற வரதராஜஸ்தவ ஸ்ரீஸூக்தி உணர்க. இனி நுண்ணூலதாமரை யித்யாதிக்கு வேறுவகையாகவும் பொருள் கூறலாம். நுட்பமான நூலையுடைத்தான் யாதொரு தாமரையுண்டு, அதன்மேல் பொருந்தியிருக்கும் பெரியபிராட்டியாருடைய, மனம் –திருமார்பு, அதாவது திருமுலைத்தடம் என்று, பெரியபிராட்டியாருடைய நெஞ்சையே கொள்ளவுமாம். தாமரை நாளத்தில் நுட்பமான நூல் இருப்பது ப்ரஸித்தம். மேற்பால் – மேலிடத்தில், மேலே என்றபடி.

குருந்தொசித்த வரலாறு – கண்ணனைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் ஒருவன் ஒருநாள் கண்ணபிரான் மலர் கொய்தற்பொருட்டு விரும்பியேறும் குருந்தமாமொன்றில் பிரவேசித்து அப்பெருமான் வந்து தன்மீது ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக்கருதியபோது மாயவனான கண்ணபிரான் அம்மரத்தைக் கைகளாற்பிடித்துத் தன்வலிமைகொண்டு முறித்து அழித்தன்னென்பதாம்.

 

English Translation

The Lord residing in Venkatam, the Lord who came as krishna and broke a kurunda tree, is still the Lord residing in the ocean, in Valikunta, in the vedas and in the hearts of truthful vedic seers.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top