(2320)
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.
பதவுரை
|
இறை ஆய் |
– |
ஸர்வஸ்வாமியாய் |
|
நிலன் ஆகி |
– |
பூமிக்கு அந்தர்யாமியாய் |
|
எண் திசையும் தான் ஆய் |
– |
எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாகவுடையனாய் |
|
மறை அய் |
– |
வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய் |
|
மறைபொருள் ஆய் |
– |
அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய் |
|
வான் ஆய் |
– |
நித்ய விபூதி நிர்வாஹகனாய் |
|
பிறை வாய்ந்த |
– |
சந்திரபதத்தைக் கிட்டியிருப்பதும் |
|
வெள்ளம் அருவி |
– |
மிக்க ஜலத்தையுடைய அருவிகளினுடைய |
|
விளங்கு ஒலி |
– |
விளங்குகின்ற கோஷத்தையுடைத்தான் |
|
நீர் |
– |
நீரையுடையதுமான |
|
வேங்கடத்தான் |
– |
திருவேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான் |
|
உள்ளத்தின் உள்ளே உளன் |
– |
என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான் |
.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்படி ஜகத்திலுள்ள பொருள்களெல்லாம் தானேபாயிருக்கும் பெருமான் திருமலையிலேவந்து ஸந்திஹிதனாய்ப்பின்பு என்னுடைய ஹ்ருதயத்தைவிட்டுப் போகிறனில்லை யென்கிறார். இதில் முன்னடிகளிரண்டும் ‘கீழ்ப்பாட்டிற் பொருளின் அநுவாதம்.
பிறைவாய்ந்த –இது வேங்கடத்திற்கு விசேஷணம், அருகி வெள்ளத்திற்கு விசேஷணமாகவுமாம். சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கும்படியைச் சொன்னவாறு. எங்கணும் பேரொலி செய்துகொண்டு பெருகுகின்ற அருவிகள் நிறைந்தும் ஓங்கியுயர்ந்ததுமான திருமலையிலுள்ளவனாய்க்கொண்டு அங்கிருந்து என்னுள்ளத்தில் வந்து சேர்ந்தவனாயின னென்கிறார். “மலைமேல் தான் நின்று என்மனத்துளிருந்தானை“ என்ற திருவாய்மொழியுங்காண்க.
English Translation
The Lord become this Earth, the eight Quarters, the Vedas, the substance of the Vedas, and the lord of tal Venkatam where mountain streams flow rapturously. He stays in my heart.
