(2321)
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான்,
மண்ணெடுங்கத் தானளந்த மன்.
பதவுரை
|
நல் நெஞ்சே |
– |
எனக்குப் பாங்கான மனமே! |
|
விண் ஒடுங்க |
– |
மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி |
|
கோடு |
– |
சிகரங்கள் |
|
உயரும் |
– |
உயர்ந்தோங்கி யிருக்கப்பெற்றதும் |
|
வீங்கு அருவி |
– |
நிறைந்த அருவிகளையுடையதுமான |
|
வேங்கடத் தான் |
– |
திருமலையில் எழுந்தருளியிருப்பவனும் |
|
மண் |
– |
பூமிப் பரப்பெல்லாம் |
|
ஒடுங்க |
– |
(திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி |
|
தான் அளந்த |
– |
தான் அளந்து கொண்டவனுமான |
|
மன் |
– |
ஸ்வாமியானவன் |
|
உளன் கண்டாய் |
– |
(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண், |
|
உத்தமன் |
– |
புருஷோத்தமனான அப்பெருமான் |
|
என்றும் உளன் கண்டாய் |
– |
எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷைகொண்டு) இருக்கிறான்காண், |
|
உள்ளுவார் உள்ளத்து |
– |
ஆஸ்திகர்களுடைய மனத்திலே |
|
உளன் கண்டாய் |
– |
நித்யவாஸம் பண்ணுமவன்காண் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்படி ஸர்வாதிகனான எம்பெருமான் நம்மிடத்து வந்து புகுந்த பின்பு, நெஞ்சே! நமக்கு ஒரு குறையுமில்லைகாண் என்கிறார். நம்முடைய ஸத்தையை நோக்குவதற்காகவே தான் ஸத்தை பெற்றிருக்கின்றான், ‘எம்பெருமானுளன்‘ என்று நாம் இசைந்தாலும் இசையாவிட்டாலும் எப்போதும் நம்முடைய ரக்ஷணத்திலே முயன்று உளனாயிருக்கின்றான், இதற்குறுப்பாகத் திருவேங்கடமலையிலே வந்து தங்குமவன், இக்குணங்களையெல்லாம் த்ரிவிக்ரமாவதாரத்தில் விளங்கக் காட்டினவன்.
English Translation
O Good Heart of mine! Know that the Lord exists, -now and forever. The lord who resides in the tall sky-touching hills of Venkatam, and who rose tall to measure the Earth, resides in the hearts of his devotees, -then, now and forever.
