(2322)
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, – மின்னை
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்
குடையாக ஆகாத்த கோ.
பதவுரை
|
குன்றம் குடை ஆக |
– |
கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு |
|
ஆகாத்த கோ |
– |
பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமியானவன், |
|
அன்று |
– |
முன்பொருகாலத்தில், |
|
மன்னு மணி முடி |
– |
பொருந்தின ரத்னங்களையுடைய கிரீடம்! |
|
நீண்டு |
– |
ஓங்கி வளர்ந்து |
|
அண்டம் போய் |
– |
அண்ட பித்தையைச் சென்றுகிட்ட, |
|
எண் திசையும் |
– |
எட்டு திக்குக்களையும் |
|
துன்னு பொழியில் அனைத்தும் |
– |
(பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூமண்டலம் முழுவதையும் |
|
சூழ் |
– |
வியாபித்த |
|
கழலே |
– |
திருவடியினாலேயே |
|
மின்னை உடை ஆக கொண்டு உலகு அளந்தான் |
– |
மின்னலைப் பீதாம்பரமாக அணிந்துக்கொண்டு உலகங்களை யளந்தான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகளந்த வரலாற்றைப் பேசி யநுபவிக்கிறார். முதலடியில் ‘மன்னுமணிழடி‘ என் சொல் இரட்டுற மொழிதலால் ‘மணிமயமான கிரீடத்தையணிந்த திருமுடி‘ என்றும் பொருள் படலாம்.
இடையர்கள் இந்திரனுக்கிட்ட அந்த பூஜையை விலக்கித் தானே அமுது செய்ததனால் சீற்றங்கொண்டு ஆயர்க்கும் ஆநிரைக்கும் மிக்க துன்பமுண்டாம்படியாக ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது கோவர்த்தன மலையையே குடையாக வெடுத்துப்பிடித்துநின்று காத்தருளின பெருமான் இப்படி ஆநிரையைத் துன்பப்படுத்தின அவ்விந்திரனுக்குப் பக்ஷபாதியாயிருந்து செய்த செயல் உலகளந்தது. அப்போது திருமுடியானது மேலுலகமெங்கும் நீண்டு செல்ல, திருவடியானது நிலவுலக மெங்கும் நிறைந்துசெல்ல, அந்தரிக்ஷலோகத்திலுள்ள மின்னல் திருமேனிக்குப் பீதாம்பரம்போல் விளங்க, இந்த நிலைமையாக உலகங்களை யளந்தா னெம்பெருமான் என்றாராயிற்று.
English Translation
Then in the yore the Lord rose and ripped through space, His jewelled crown touched the sky. his feet straddled the Earth and the eight Quarters, as he measured the Earth. He is the one who held a mount to save the cows.
