திருச்சந்த விருத்தம் திருமொழி – 8

(822)

வண்டுலாவு கோதைமாதர் காரணத்தி னால்வெகுண்டு

இண்டவாண னீரைஞ்ஞூறு தோள்களைத்து ணித்தநாள்

முண்டனீறன் மக்கள்வெப்பு மோடியங்கி யோடிடக்

கண்டுநாணி வாணனுக்கி ரங்கினானெம் மாயனே

விளக்க உரை

(823)

போதில்மங்கை பூதலக்கி ழத்திதேவி யன்றியும்

போதுதங்கு நான்முகன்ம கனவன்ம கஞ்சொலில்

மாதுதங்கு கூறன்ஏற தூர்தியென்று வேதநூல்

ஓதுகின்ற துண்மையல்ல தில்லைமற்று ரைக்கிலே.

விளக்க உரை

(824)

மரம்பொதச்ச ரந்துரந்து வாலிவீழ முன்னோர்நாள்

உரம்பொதச்ச ரந்துரந்த வும்பராளி யெம்பிரான்

வரம்குறிப்பில் வைத்தவர்க்க லாதுவான மாளிலும்

நிரம்புநீடு போகமெத்தி றத்தும்யார்க்கு மில்லையே.

விளக்க உரை

(825)

அறிந்தறிந்து வாமனன டியணைவ ணங்கினால்

செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும்சி றந்திடும்

மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னுமாலை வாழ்த்தினால்

பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.

விளக்க உரை

(826)

ஒன்றிநின்று நல்தவம்செய் தூழியூழி தோறெலாம்

நின்றுநின்ற வன்குணங்க ளுள்ளியுள்ளம் தூயராய்

சென்றுசென்று தேவதேவ ரும்பரும்ப ரும்பராய்

அன்றியெங்கள் செங்கண்மாலை யாவர்காண வல்லரே.

விளக்க உரை

(827)

புன்புலவ ழியடைத்த ரக்கிலச்சி னைசெய்து

நன்புலவ ழிதிறந்து ஞானநற்சு டர்கொளீஇ

என்பிலெள்கி நெஞ்சுருகி யுள்கனிந்தெ ழுந்ததோர்

அன்பிலன்றி யாழியானை யாவர்காண வல்லரே.

விளக்க உரை

(828)

எட்டுமெட்டு மெட்டுமாயொ ரேழுமேழு மேழுமாய்

எட்டுமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனை

எட்டினாய பேதமோடி றைஞ்சிநின்ற வன்பெயர்

எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர்வான மாளவே

விளக்க உரை

(829)

சோர்விலாத காதலால்தொ டக்கறாம னத்தராய்

நீரராவ ணைக்கிடந்த நின்மலன்ந லங்கழல்

ஆர்வமோடி றைஞ்சிநின்ற வன்பெயரெட் டெழுத்தும்

வாரமாக வோதுவார்கள் வல்லர்வான மாளவே.

விளக்க உரை

(830)

பத்தினோடு பத்துமாயொ ரேழினோடொ ரொன்பதாய்

பத்தினால்தி சைக்கணின்ற நாடுபெற்ற நன்மையாய்

பத்தினாய தோற்றமோடொ ராற்றல்மிக்க வாதிபால்

பத்தராம வர்க்கலாது முத்திமுற்ற லாகுமே.

விளக்க உரை

(831)

வாசியாகி நேசமின்றி வந்தெதிர்ந்த தேனுகன்

நாசமாகி நாளுலப்ப நன்மைசேர்ப னங்கனிக்கு

வீசிமேல்நி மிர்ந்ததோளி லில்லையாக்கி னாய்கழற்கு

ஆசையாம வர்க்கலால மரராக லாகுமே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top