(828)

(828)

எட்டுமெட்டு மெட்டுமாயொ ரேழுமேழு மேழுமாய்

எட்டுமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனை

எட்டினாய பேதமோடி றைஞ்சிநின்ற வன்பெயர்

எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர்வான மாளவே

பதவுரை

எட்டும் எட்டும் எட்டும் ஆய்

–

இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும்
ஓர் ஏழும் ஏழும் ஆய்

–

ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற

–

த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற
ஆதி தேவனை

–

பரமபுருஷனை
எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று

–

ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி
அவள் பெயர் எட்டு எழுத்தும்

–

அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை
ஓதுவார்கள்

–

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன வல்லர்

–

பரமபதத்தை ஆளவல்லவர்களாவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எட்டும் எட்டும் எட்டுமாய் = மூவெட்டு இருபத்தினான்கு; கருமேந்திரியங்கள் ஐந்து; ஞானேந்திரியங்கள் ஐந்து; சப்தாதி விஷயங்கள் ஐந்து; நிலம் நீர் முதலிய பூதங்கள் ஐந்து; மநஸ் , மஹாந், அஹங்காரம், ப்ரக்ருதி – ஆக இருபத்தினான்கு தத்துவங்களுண்டிறே; அந்தத் துவங்களுக்கு அந்தராத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது. (ஓர் ஏழும் இத்யாதி. “ஜம்பூத்வீபம் முதலிய ஏழு தீவுகளென்ன, ஏழு குலபர்வதங்களென்ன, ஏழு கடல்களென்ன இவற்றுக்கு நிர்வாஹகனென்கிறது. எட்டும் மூன்றும் ஒன்றும் கூடினால் பன்னிரண்டாம்; த்வாதசாதித்யர்களுக்கு அந்தர்யாமியானவ னென்றபடி, இப்படிப்பட்ட ஸர்வஜகத்காரணபூதனான எம்பெருமானை அஷ்டாங்க ப்ரமணாமபூர்வமாக ஆச்ரயித்துத் திரவஷ்டாக்ஷரத்தை ஓதுமவர்கள் பரமபதத்தை ஆளப்பெறுவார்களென்கிறார். எட்டினாய பேதமோடிறைஞ்சுகையாவது- “*** *** ***” என்றபடி ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணுகை. பேதம் – *** மென்ற வடசொல் விகாரம். பேதமாவது ப்ரகாரம்.

English Translation

The twenty four – the Principles, the first cause Lord is all of these and twelve, — the Adityas as well. The dear devoted worshippers who prostrate at his lotus feet, and learn his name in eight letters are rulers of the sky above.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top