(824)

(824)

மரம்பொதச்ச ரந்துரந்து வாலிவீழ முன்னோர்நாள்

உரம்பொதச்ச ரந்துரந்த வும்பராளி யெம்பிரான்

வரம்குறிப்பில் வைத்தவர்க்க லாதுவான மாளிலும்

நிரம்புநீடு போகமெத்தி றத்தும்யார்க்கு மில்லையே.

பதவுரை

முன் ஓர் நாள்

முன்னொரு காலத்திலே
மரம் பொத

ஸம்பஸாலவ்ருஹங்கள் துளைபடும்படியாக
சரம் துரந்து

அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு)
வாலி வீழ

வாலியானவன் முடியும்படியும்
உரம் பொத

அவனது மார்பிலே பொத்தும் படியும்
சரம் துரந்த

பாணத்தைப் பிரயோகித்த
உம்பர் ஆளி எம் பிரான்

தேவாதி தேவனான எம்பெருமான்
வரம் குறிப்பில்

(தன்னுடைய) சிறந்த திருவுள்ளத்திலே
வைத்தவர்க்கு அலாது

யாரை விஷயீகரிக்கிறானோ அவர்கட்குத் தவிர;
வானம் ஆளினும்

மேலுலகங்கட்கு அதிபதிகளாயிருந்தாலும்
யார்க்கும்

மற்றவர்கட்கும்
நிரம்பு நீடு போகம்

சாச்வதமாய்ப் பர்பூர்ணமான கைங்கர்யஸுகம்
எத்திறத்தும்

எவ்வழியாலும்
இல்லை

கிடைக்கமாட்டாது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அந்தப் பரமபுருஷனை இராமபிரானாகத் திருவவதரித்தன னென்றுசொல்லி அந்த மஹாநுபாவனால் திருவுள்ளம்பற்றப்படாதவர்கள் உத்தமாதிகாரிகளாயிருந்தாலும் யத்ய ஸுகாநுபவத்திற்கு உரியரல்லர் என்கிறார்.

ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்ததுபோலவே வாலியின் மார்பையும் பாணத்தினால் துளைத்து அவனுயிரை மாய்த்த மஹாநுபாவனது திருவுள்ளத்தாலே விஷயீகரிக்கப்பட்டவர்களுக்கன்றி மற்றெவர்க்கும் நித்யமான மோக்ஷத்தைப்பெற வழியில்லை. மூன்றாபடியில், அலாது = ‘அல்லது’ என்பது அலது எனத் தொக்கி நீட்டல் பெற்றது. வானம் ஆனிலும் = சிறந்த ஞானத்தையுடையராய்ப் பதினான்கு லோகங்கட்கும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளாயிருந்தாலும் என்றபடி.

English Translation

The Lord of gods my Lord, in yore, he pierced an arrow through the trees and sent an arrow through the chest of Vali, king of monkey clan. For those who do not set their aim on him alone, who rules the sky, the joy of fullness can be known by no one and by no means here.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top