(823)

(823)

போதில்மங்கை பூதலக்கி ழத்திதேவி யன்றியும்

போதுதங்கு நான்முகன்ம கனவன்ம கஞ்சொலில்

மாதுதங்கு கூறன்ஏற தூர்தியென்று வேதநூல்

ஓதுகின்ற துண்மையல்ல தில்லைமற்று ரைக்கிலே.

பதவுரை

போதில் மங்கை

–

பூமகளான லக்ஷிமியும்
பூதலம் கிழத்தி

–

பூமிப்பிராட்டியும்
தேவி

–

தேவிமாராவர்;
அன்றியும்

–

மேலும்
போது தங்குநான் முகன்

–

பூவிலே பொருந்திருப்பவனான பிரமன்
அவன் மகன்

–

பேரனாயிரா நின்றான்;
என்று

–

இவ்வண்ணமாக
வேதம்நூல்

–

வேத சாஸ்த்ரம்
ஓதுகின்றது

–

உரைப்பதானது
உண்மை

–

ஸத்யம்
மகன்

–

புத்திரனாயிரா நின்றான்;
சொலில்

–

மேலும் சொல்லப்புக்கால்
மாது தங்கு கூறன்

–

ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய்
ஏறு அது ஊர்தி

–

எருதை வாஹனமாக வுடையனான சிவன்
மற்று

–

இங்ஙனன்றிக்கே
அல்லது

–

இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை)
உரைக்கில்

–

(சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில்
இல்லை

–

அது அஸத்யம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய பரத்வஹேதுவான பெருமைகளைப் பேசுகிறார். பூவிலே பிறந்த பெரியபிராட்டியாரும்; ஸ்ரீபூமிப்பிராட்டியாரும் தேவிமாராக இருக்கிறார்கள்; நாபிக்கமலத்திலே பிறந்த நான்முகம் புத்திரனாக அமைந்திருக்கிறான்; ஸாம்பமூர்த்தியாய் ஸ்ரூஷபத்வஜனான ருத்திரன் பௌத்திரனாக அமைந்திருக்கிறான் – இது நான் சொல்லும் வார்த்தையல்ல; வேதங்களில் முறையிடப்படும் பொருள் இதுவேயாம். இது யதார்த்தமேயன்றி ப்ரசம்ஸாவாக்யமல்ல. ச்ரிய: பதி என்னுமிடமும் பிரமனுக்குப்பிதா என்னுமிடமும் சிவனுக்குப் பிதாமஹன் என்னுமிடமும் எம்பெருமானுடைய பரத்துவத்தை ஸ்தாபித்துக்கொடுத்து சிவாதிகளுடைய அவரத்வத்தையும் நிலைநாட்டித்தருமென்க.

English Translation

The lotus-lady on his chest and Earthy lady at his feet, are spouses for the lotus-Lord whose navel bears the Maker-Lord. The Lord with lady-half-his-self, — rider of the bull, — Siva is son of Brahma, Vedas quoth, now all the rest is falsity.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top