(827)

(827)

புன்புலவ ழியடைத்த ரக்கிலச்சி னைசெய்து

நன்புலவ ழிதிறந்து ஞானநற்சு டர்கொளீஇ

என்பிலெள்கி நெஞ்சுருகி யுள்கனிந்தெ ழுந்ததோர்

அன்பிலன்றி யாழியானை யாவர்காண வல்லரே.

பதவுரை

புல்

க்ஷுத்ரங்களான
புலன் வழி

சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை
அடைத்து

அடைத்து
அரக்கு இலச்சினை செய்து

(விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு
நன் புலன் வழி திறந்து

ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு
ஞானம்

ஞானமாகிய
நல்சுடர்

விலக்ஷமான ப்ரபையை
கொளீ இ

கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து)
என்பு இல்

எலும்பு வீடாகிய சரீரம்
என்கி

சிதிலமாகி
நெஞ்சு உருகி

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உள் கனிந்து

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி

பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது
ஆழியானை

திருவாழியைக் கையிலேந்தின பெருமானை

யாவர் காண வல்லர்  ?.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** -க்ஷûத்ர விஷயங்களைப் பற்றியோடுகிற இந்திரியங்களின் ஓட்டத்தைத் தடுத்து அவ்விஷயமார்க்கமே புல்மூடிப் போம்படி அடைத்து அரக்கு முத்திரையிட்டு வானனையும் மறுவலிடாதபடி பண்ணி, விலக்ஷண விஷயத்தில் இந்த்ரியங்களைப் பரவவிட்டு விலக்ஷணமான ஜ்ஞாநப்ரபையை நன்றாக விளக்கி எம்பெருமானுடைய ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வஜ்ஞாநத்துக்கு விஷயமாக்கி, அஸ்திமயமான சரீரம் சிதிலமாய் ஹ்ருதயம் உருகிக் கனிந்த ப்ரேம முண்டானவல்லது சக்ரபாணியான எம்பெருமானை யார் ஸாக்ஷாத்கரிக்கவல்லர்?- “எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறபடியே- விஷயாந்தரங்களிலே அவகாஹிப்பதற்கு அடியான பாபத்தையும் எம்பெருமான் திறத்தில் வைமுக்கியத்துடனிருக்கைக்கு ஹேதுவான பாபத்தையும் கையில் திருவாழியாலே இரு துண்டமாக வெட்டி, கையுந் திருவாழியுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காட்டித் தன் விஷயமான பக்தியை வளரச்செய்த அப்பெருமானை நான் கண்டாப்போனே வேறுயார் காணவல்லாரென்றவாறு.

புன்புலவழிகளில் அரக்கிலக்கினை (ஸீல்) வைக்க முடியுமோ வென்னில்; மறுபடியும் அந்த வழி காணவொண்ணாதபடி நன்றாக அதனை மறந்து என்றபடி, என்பிலென்கி = என்பு- எலும்பு; எலும்புகட்கு, இல்- இருப்பிடம், சரீரம் ; அது என்குமோ வெனில் “கடல்நிறக்கடவுளெந்தையரவணைத்துயிலுமா  கண்டு, உடலெனக் குருகுமானோ” என்றாரே தொண்டரடிப் பொடியாழ்வார்.

English Translation

Subdue the senses; seal the paths with sealing wax and branding seals. Throw the portal doors of open heart and light a lamp in it. With shaking body, melting heart and quaking voice of ripe wisdom, the love that surging rises high, alone is way to see the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top