(802)
சரங்களைத் துரந்து வில் வளைத்து, இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்,
பரந்துபொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன்பணிந்த கோயிலே.
(803)
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்த்தைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்,
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்,
அற்ற பற்றர், சுற்றி வாழும் அந்தண் நிர் அரங்கமே.
(804)
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
(805)
இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன்
மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம்
குலைத்தலைத்தி றுத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு
அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே.
(806)
மன்னுமாம லர்க்கிழத்தி வையமங்கை மைந்தனாய்
பின்னுமாயர் பின்னைதோள்ம ணம்புணர்ந்த தன்றியும்
உன்னபாத மென்னசிந்தை மன்னவைத்து நல்கினாய்
பொன்னிசூ ழரங்கமேய புண்டரீக னல்லையே.
(807)
இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக
கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே
விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார்
வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.
(808)
சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான்
கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர்
பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே.
(809)
மரங்கெட நடந்தடர்த்து மத்தயானை மத்தகத்து
உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ சித்துகந்த வுத்தமா
துரங்கம்வாய்பி ளந்துமண்ண ளந்தபாதவேதியர்
வரங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.
(810)
சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில்
கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா
காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை
காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே.
(811)
செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று
எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ்
செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.