(805)
இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன்
மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம்
குலைத்தலைத்தி றுத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு
அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே.
பதவுரை
| இலை தலை |
– |
இலைபோன்ற நுனியையுடைய |
| சரம் |
– |
அம்புகளை |
| துரந்து |
– |
பிரயோகித்து |
| இலங்கை |
– |
எல்லையினுடைய |
| கட்டு |
– |
அரண்களை |
| அழித்தவன் |
– |
அழியச்செய்த இராமபிரான்; |
| மலைத்தலை |
– |
(ஸஹ்யமென்னும்) மலையிலே |
| பிறந்து |
– |
பிறந்து |
| இழிந்து |
– |
அங்கு நின்றும் ப்ரவஹித்து |
| வந்து |
– |
நெடுக ஓடிவந்து |
| சந்தனம் |
– |
சந்தன மரங்களை |
| நுந்து |
– |
(போர்த்துத்) தள்ளாநின்றதாயும், |
| குலைத்து |
– |
(குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி |
| அலைத்து |
– |
அலசி |
| இறுத்து |
– |
முறிக்க |
| எறிந்த |
– |
(அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின |
| குங்குமம் குழம்பினோடு |
– |
குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட |
| அலைத்து ஒழுகு காவிரி |
– |
அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய |
| அரங்கம் |
– |
கோயிலிலே |
| மேய |
– |
எழுந்தருளியிருக்கிற |
| அண்ணன் |
– |
ஸ்வாமியாவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (இலங்கை கட்டழித்தவன் அரங்கமேய அண்ணல் என்றவாறு. ஸ்ரீவைஷ்ணவர்கள் நாடோறும் நீராடும்போது இப்பாட்டை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.
English Translation
The Lord who rained his arrows on the Lanka fort and broke it down, –He lives in Rangam-oor amid the lasting waves of Kaveri: Her course begins in hills above, she falls with fury down the slopes, and washes Sandal trees along the path with red and tawny soil.
