(804)
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
பதவுரை
| மோடியோடு |
– |
காளியும் |
| இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான் |
– |
வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் |
| மக்களோடு |
– |
ஸ்வஜனங்களோடு |
| கூடு |
– |
திரண்ட |
| சேனை |
– |
ஸேனையை |
| கொண்டு |
– |
அழைத்துக்கொண்டு |
| வெம் சமத்து |
– |
பயங்கரமான போர்க்களத்திலிருந்து |
| மண்டி ஓட |
– |
வேகமாக ஓடிப்போன வளவிலே |
| வாணன் |
– |
பாணாஸுரனது |
| ஆயிரம் கரம் |
– |
ஆயிரம் கைகளை |
| கழித்த |
– |
அறித்தொழித்த |
| ஆதி மால் |
– |
பரமபுருஷனுடைய |
| பீடுகோயில் |
– |
பெருமைதங்கிய கோயில் |
| நீர் கூடு |
– |
காவேரியோடு கூடின |
| அரங்கம் என்றபோது |
– |
திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இலச்சை- ‘லஜ்ஜா’ என்ற வடசொல் திரிபு; வெட்கமென்று பொருள். லஜ்ஜாவஹமான சாபத்தை யடைந்த முக்கண்ணன் என்றவாறு. சாபமெய்தி = வினையெச்சமல்ல; பெயர்.
English Translation
The curse of shame, the three-eyed Lord had given to goddess Parvati, –She took her sons and host-of-gods and ran against calamity!, –they ran while all the thousand arms of Bana fell on all the sides. The Lord who wields a discus lives in cool Arangam-oor today.
