(808)

(808)

சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்

அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான்

கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர்

பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே.

பதவுரை

சங்கு தங்கு முன் கை நங்கை

–

(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை

–

திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன்

–

விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம்

–

சரீரமானது
மங்க

–

மாளவேணுமென்று
அன்று சென்று

–

முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து

–

அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த

–

(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான்

–

கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல்

–

நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார்

–

திவ்யஸுந்தரிகள்
குடந்தை

–

அவகாஹிக்கப்பெற்ற
நீர்

–

தீர்த்தமானது
பொங்கு

–

வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள்

–

குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த

–

பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன்

–

ஸுந்தராங்கன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “கொங்கைதங்கு வார்குழல் மடந்தைமார்” என்றது லௌகிக ஸ்த்ரீகளையல்ல; “ம.தி.மு.க. மடந்தைய ரேந்தினர்வந்தே” என்று ஆழ்வாரருளிச் செய்தபடி பரமபதத்திலே எதிர்கொண்டழைக்கு மலர்களான திவ்யஸுந்தரிகளைச் சொல்லுகிறது.

English Translation

The Rakshasa King Ravana – He sought the breast of Sita dame!, — was killed in battle by the Lord who hit an arrow with his bow. O Lotus-Lord reclining in the waters of Kudandai-oor, where fragrant long-hair coiffure-dames do bathe and frolic in the stream!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top