(810)

(810)

சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில்

கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா

காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை

காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே.

பதவுரை

சாலிவேலி

–

செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய
தண் வயல் தடம் கிடங்கு

–

குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன
தண்

–

குளிர்ந்ததான
குடந்தை

–

திருக்குடந்தையிலே

மேய எழுந்தருளியிராநின்ற

கோவலா

–

க்ருஷ்ணனே!
காலநேமி

–

காலநேமியென்ன
வக்கரன்

–

தந்தவக்ரனென்ன
பூபொழில் கோலம் நீடு மாடம்

–

புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய்
கரன் முரன்

–

கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை

–

தலைகளானவை
காலனோடு கூட

–

யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த

–

வில்லை வளைத்த
வில் கை

–

அழகிய திருக்கையையுடைய
வீரனே

–

தனி வீரனே! (என்று ஏத்துகிறார்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காலநேமி யென்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன், வக்கரன் – தந்தவக்ரன்; தத்துவக்த்ரன் என்று சொல்வதுமுண்டு. கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர்செய்த அரசர்களில் இவனொருவன், முரண் = நரகாசுரனுடைய மந்திரி. கரன் என்று ஒரு ராக்ஷணுண்டாகிலும் அவன் இங்கே விவக்ஷிதனல்லன்; அவன் ராமாவதாரத்தில் கொல்லப்பட்டவன்; இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சரிதங்கள் அநுஸந்திக்கப்படுவதால் கரன் என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று. *** என்ற வடசொல் க்ரூரனென்ற பொருளையுமுடையது. “சிரமவை காலனோடுகூட” என்றவிடத்து “அறுத்து” என்றொரு வினையெச்சத்தை வருவித்துக்கொண்டு உரைத்ததுமொன்று.

English Translation

O Cowherd-Lord reclining in Kudandai over cool waters, surrounded by the fields and groves and richly laid-out mansion-homes. You rolled the head of Kalanemi, sent him down the path of Hell. You felled the heads of Vakradanta, and the horrible Mura.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top