(811)

(811)

செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய்

விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று

எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ்

செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

பதவுரை

செழும் கொழும் பெரும்பணி

இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது.
பொழிந்திட

பொழிந்தவளவிலே
உயர்ந்த வேய் விழுந்து

முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து

(பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு
எழுந்து

(அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி
விண் புடைக்கும்

விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய
வேங்கடத்துள்

திருவேங்கடமலையிலே
நின்று

நின்றருளி
தேன்

வண்டுகளானவை
எழுந்து இருந்து பொருந்து

மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற
பூ பொழில்

புஷ்பங்கள் நிறைந்த சோலைகள்
தழை கொழும்

தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய்
செழும்கடல்

செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான்
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண்வளர்ந்தருளா நின்ற
மால் அல்லையே

பெருமாள் நீயிறே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “நிலையார நின்றான் தன் நீள்கழலே யடைநெஞ்சே” என்று நிலையழகிலே ஈடுபடுவார்க்கும்  “கிடந்ததோர் கிடக்கைகண்டு மெங்ஙனம் மறந்து வாழ்கேன்?” என்று சயகத் திருகோலத்திலே ஈடுபடுவார்க்கும் போக்யமாகத் திருவேங்கடமலையில் நின்றருளியும் திருக்குடந்தையில் சாய்தருளியும் போருகிறது. அடியார் பக்கலுள்ள வ்யாமோஹத்தின் காரியமன்றோ வென்கிறார். உலர்ந்து= பணி உரை; எச்சத்திரிபு.

English Translation

You stand in Venkatam the hill where bamboo shoots know how to pray; They drop to ground by dew of night and  rise again by heat of Sun. you lie in cool Kudandai plains where bees in blossoms fill the bower; they fly so high and drop again to drink the nectar of the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top