திருச்சந்த விருத்தம் திருமொழி – 9

(832)

கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து

உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய்

மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம்

அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ

விளக்க உரை

(833)

எத்திறத்து மொத்துநின்று யர்ந்துயர்ந்த பெற்றியோய்

முத்திறத்து மூரிநீர ராவணைத்து யின்றநின்

பத்துறுத்த சிந்தையோடு நின்றுபாசம் விட்டவர்க்கு

எத்திறத்து மின்பமிங்கு மங்குமெங்கு மாகுமே.

விளக்க உரை

(834)

மட்டுலாவு தண்டுழாய லங்கலாய் புலன்கழல்

விட்டுவீழ்வி லாதபோகம் விண்ணில்நண்ணி யேறினும்

எட்டினோடி ரண்டெனும்க யிற்றினால்ம னந்தனைக்

கட்டிவீடி லாதுவைத்த காதலின்ப மாகுமே.

விளக்க உரை

(835)

பின்பிறக்க வைத்தனன்கொ லன்றிநின்று தன்கழற்கு

அன்புறைக்க வைத்தநாள றிந்தனன்கொ லாழியான்

தந்திறத்தொ ரன்பிலாவ றிவிலாத நாயினேன்

எந்திறத்தி லென்கொலெம்பி ரான்குறிப்பில் வைத்ததே

விளக்க உரை

(836)

நச்சராவ ணைக்கிடந்த நாத.பாத போதினில்

வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்

மெய்த்தன்வல்லை யாதலால றிந்தனன்நின் மாயமே

உய்த்துநின்ம யக்கினில்ம யக்கலென்னை

விளக்க உரை

(837)

சாடுசாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்

ஆடராவின் வன்பிடர்ந டம்பயின்றநாதனே

கோடுநீடு கைய செய்ய பாதநாளு முன்னினால்

வீடனாக மெய்செயாத வண்ணமென்கொல் கண்ணனே.

விளக்க உரை

(838)

நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி னாதனோடு போதின்மேல்

நற்றவத்து நாதனோடு மற்றுமுள்ள வானவர்

கற்றபெற்றி யால்வணங்கு பாத நாத வேதநின்

பற்றலாலொர் பற்றுமற்ற துற்றிலேனு ரைக்கிலே.

விளக்க உரை

(839)

வெள்ளைவேலை வெற்புநாட்டி வெள்ளெயிற்ற ராவளாய்

அள்ளலாக்க டைந்தவன்ற ருவரைக்கொ ராமையாய்

உள்ளநோய்கள் தீர்மருந்து வானவர்க்க ளித்தஎம்

வள்ளலாரையன்றிமற்றொர்தெய்வம்நான்ம திப்பனே.

விளக்க உரை

(840)

பார்மிகுத்த பாரமுன்னொ ழிச்சுவான ருச்சனன்

தேர்மிகுத்து மாயமாக்கி நின்றுகொன்று வென்றிசேர்

மாரதர்க்கு வான்கொடுத்து வையமைவர் பாலதாம்

சீர்மிகுத்த நின்னலாலொர் தெய்வம்நான்ம திப்பனே.

விளக்க உரை

(841)

குலங்களாய வீரிரண்டி லொன்றிலும்பி றந்திலேன்

நலங்களாய நற்கலைகள் நாவிலும்ந வின்றிலேன்

புலன்களைந்தும் வென்றிலேன்பொ றியிலேன்பு னிதநின்

இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top