(839)
வெள்ளைவேலை வெற்புநாட்டி வெள்ளெயிற்ற ராவளாய்
அள்ளலாக்க டைந்தவன்ற ருவரைக்கொ ராமையாய்
உள்ளநோய்கள் தீர்மருந்து வானவர்க்க ளித்தஎம்
வள்ளலாரையன்றிமற்றொர்தெய்வம்நான்ம திப்பனே.
பதவுரை
| வெள்ளை வேலை |
– |
வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே |
| வெற்பு |
– |
மந்தரமலையை |
| நாட்டி |
– |
நட்டு |
| வேள் எயிறு அரர் |
– |
வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை |
| அளாய் |
– |
(கடைகயிறாகச்) சுற்றி |
| அள்ளல் ஆ |
– |
அலைகள் செறியும்படி |
| கடைந்தஅன்று |
– |
(கடலைக்) கடைந்தருளின காலத்தில் |
| அருவரைக்கு |
– |
தாங்க முடியாததான அம்மலைக்கு |
| ஓர் ஆமை நெய் |
– |
(தாரகமான) ஒரு ஆமையாகி |
| வானவர்களுக்கு |
– |
தேவதைகளுக்கு |
| உள்ள நோய்கள் தீர் மருந்து |
– |
ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை |
| அளித்த |
– |
(கடலிற் கடைந்தெடுத்து) அருளின |
| எம் வள்ளலாரை |
– |
உதாரனான எம்பெருமானை |
| அன்றி |
– |
யன்றி |
| மற்று ஓர் தெய்வம் |
– |
வேறொரு தேவதையை |
| நான் மதிப்பவனே |
– |
நான் (ஒருபொருளாக) மதிப்பனோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வெளுத்தகடலிலே மந்தரமலையை மத்தாகநாட்டி வெளுத்த பற்களையுடைய வாஸுகியென்னும் நாகத்தைக் கடை கயிறாக அதிலேற்றி அந்த மாகடலை “கடல்மாறு சுழன்றழைக்கின்ற வொலி” என்னும்படியே திசைகள் எதிரேவந்து செறியும்படியாகக் கடைந்தருளின காலத்து அம்மலை ஆழந்துபோகாமல் தன் முதுகிலே நின்று சுழலும்படி கூர்மரூபியாய்த் தாங்கிக் கிடந்து, தேவதைகட்கு ஏற்பட்டிருந்த துன்பங்களெல்லாம் தீரும்படியான மருந்தாகிய அம்ருதத்தை அவர்கட்கு எடுத்தருளி பரமோதானான பரமபுருஷனையன்றி வேறொரு தெய்வத்தை ஆச்ரயபணீயமாக நினைப்பனோ நான் என்கிறார்.
English Translation
I praise the Lord benevolent; — He came as turtle in the yore to bear the burden of a rock, to churn an ocean full of milk. With Vasuki the serpent as a churning rope on Meru mount, He gave ambrosia to the gods, — now how can I, another god?
