(833)
எத்திறத்து மொத்துநின்று யர்ந்துயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரிநீர ராவணைத்து யின்றநின்
பத்துறுத்த சிந்தையோடு நின்றுபாசம் விட்டவர்க்கு
எத்திறத்து மின்பமிங்கு மங்குமெங்கு மாகுமே.
பதவுரை
| எத்திறத்தும் ஒத்து நின்று |
– |
எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும் |
| உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் |
– |
(குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே! |
| மூத்திறத்து மூரி நீர் |
– |
திருப்பாற்கடலிலே |
| அரா அணை துயின்ற |
– |
சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற |
| நின் |
– |
தேவரீர் விஷயத்திலே |
| பத்து உறுத்த சிந்தையோடு நின்று |
– |
பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து |
| பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம் |
– |
விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும் |
| இங்கும் |
– |
இவ்வுலகத்திலும் |
| அங்கம் |
– |
அவ்வுலகத்திலும் |
|
எங்கும் மற்றெவ்வுலகத்திலும் |
||
| ஆகும் |
– |
எளிதாம். |
| பாட்டு |
– |
பின்பிறக்கவைத்தனன் கொல். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தேவஜாதியிலும் மநுஷ்யனாதியிலும் திர்யக்ஜாதியிலும் ஸ்தாவரஜாதியிலும் ஸஜாதீயனாய் அவதரித்து தஜ்ஜாதியர்களை அந்தந்த ஜாதியாலே ஒருபுடையொத்திருந்தாலும் குணப்பெருமயாலுண்டான மேன்மையையுடையவனே! திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளாநின்ற உன்பக்கல் பக்திமிகுந்த மநோரதத்தோடே நின்று விஷயாந்தரங்களில் பற்றை அறுத்துக்கொள்பவர்கட்கு இம்மண்ணுலகத்திலும் வானுலகத்திலும் மற்றெவ்வுலகத்திலும் ஸர்வப்காரங்களாலும் ஆநந்தம்- நிரம்புமென்கிறார். முந்நிறத்து மூரிநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று மூன்றுவகைப்பட்ட நீரையுடையது கடல். “முந்நீர்’ என்னக்கடவதிறே. மூரி- பழையதான; பெரிதான என்றுமாம்.
English Translation
O Lord present in all the forms, O Lord transcending all the forms! O Lord who sleeps in ocean-deep on serpent-bed in Yogic ease! For those who count on you alone and sacrifice their fixations, a life of joy untold awaits them here and there and hereafter.
