(832)

(832)

கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து

உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய்

மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம்

அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ

பதவுரை

கடைந்த

–

(கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட
பால் கடல்

–

திருப்பாற்கடலிலே
கிடந்து

–

கண்வளர்ந்தருளியும்
காலநேமியை

–

காலநேமியென்னுமசுரனை
கடிந்து

–

ஒழித்தருளியும்
உடைந்த

–

நடுங்கிக் கிடந்த

வாலி தந்தனுக்கு வாலியின் தம்பியான சுக்ரீவனுக்கு

உதவ

–

உபகாரம் செய்ய
இராமன் ஆய் வந்து

–

இராமபிரானாய் வந்து தோன்றி
மிடத்தை

–

ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த
ஏழ் மரங்களும்

–

ஸப்தஸால வ்ருக்ஷங்களையும்
அடங்க

–

ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும்
எய்து

–

பாணத்தாலே துளைபடுத்தி
வேங்கடம் அடைந்த

–

திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான
மால

–

எம்பெருமானுடைய
பாதமே

–

திருவடிகளையே
நாளும்

–

நாள்தோறும்
அடைந்து

–

ஆச்ரயித்து
உய்ம்மின்

–

உஜ்ஜிவியுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உடைந்தவாலி தந்தனுக்கு.) ‘உடைந்த’ என்ற அடைமொழி வாலிக்கும் ஆகலாம்; வாலிதம்பிக்குமாகலாம். உடைதல்- தளர்வு. வாலி, ‘நமக்குப் பகையான ஸுக்ரீவன் நாம் புகவொண்ணாதரிச்யமூகமலையிலே ஹனுமானைத் துணைகொண்டு வாழாநின்றான்; எந்த ஸமயத்திலே நமக்கு என்ன தீங்கை விளைப்பானோ’ என்று உடைந்து கிடப்பவன். ஸுக்ரீவனுடைய உடைதல் சொல்ல வேண்டா. “வாலி தன்பீனுக்கு” எனப் பாடமிருந்திருக்க மென்பர்.

English Translation

O Lord in Milky Ocean-white, O Kalanemi-vanquisher! You came on Earth as Bow-Rama; you gave your word to Sugriva, and shot an arrow through the trees, O lord who lives in Venkatam! O people of the dainty Earth! Come, love the Lord and live again.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top