(831)

(831)

வாசியாகி நேசமின்றி வந்தெதிர்ந்த தேனுகன்

நாசமாகி நாளுலப்ப நன்மைசேர்ப னங்கனிக்கு

வீசிமேல்நி மிர்ந்ததோளி லில்லையாக்கி னாய்கழற்கு

ஆசையாம வர்க்கலால மரராக லாகுமே.

பதவுரை

வாசி ஆகி

(கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு
நேசம் இன்றி வந்து

பக்தியற்றவனாய் வந்து
எதிந்த

எதிரிட்ட
தேனுகன்

தேநுகாஸுரனை
நாசம் ஆகி நான் உலப்ப

ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக
மேல் நிமிர்ந்த தோளின்

உயர்த்தூக்கப்பட்ட தோளாலே
நன்மை சேர் பணங்கனிக்கு வீசி

அழகிய பணம்பழங்களின் மேலே தூக்கியெறிந்து
இல்லை ஆக்கினாய் கழற்கு

(அவ்வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு
ஆசை ஆமவர்க்கு அலால்

நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு
அமரர் ஆகல்

நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல்
ஆகுமே

கூடுமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “பத்தினாபதோற்றமோடு” என்று ப்ரஸ்தாவிக்கப்பட்ட தசராவதாரங்களுள் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை அநுஸந்தித்து அவ்வவதார சேஷ்டிதங்களுன் ஒன்றான தேநுகாஸுர நிரஸந விருத்தாந்தத்தைப் பேசி, இப்படிப்பட்ட ஆச்ரித விரோதி நிவாதகனான எம்பெருமான் திருவடிகளிலே ஆசையுடையார்க்கன்றி மற்றையோர்க்கு நித்யஸூரிபோகம் கிடைக்கமாட்டாதென்கிறார்.

English Translation

The loveless hated Dhenukan, the ass who came against a hill, — you swirled and let him hit against a tree with fruiting Palmyra. O Lord with golden lotus feet, you killed the Asuras in hordes. By pouring heart with love to you, a mortal too can be a god!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top