(841)
குலங்களாய வீரிரண்டி லொன்றிலும்பி றந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாவிலும்ந வின்றிலேன்
புலன்களைந்தும் வென்றிலேன்பொ றியிலேன்பு னிதநின்
இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே.
பதவுரை
| புனித |
– |
பரிசுத்தமான |
| எம் ஈசனே |
– |
எம்பெருமானே! |
| குலங்கள் ஆய ஈர் இரண்டில் |
– |
(ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள் |
|
ஒன்றிலும் ஒரு வர்ணத்திலும் |
||
| பிறந்திலேன் |
– |
நான் பிறக்கவில்லை |
| கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும் |
– |
(சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும் |
| நவின்றிலேன் |
– |
பயிற்சி செய்யவில்லை; |
| புலன்கள் ஐந்தும் |
– |
பஞ்சேந்திரியங்களையும் |
| வென்றிலேன் |
– |
ஜயிக்கவில்லை. |
| பொறியிலேன் |
– |
பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு) |
| நின் |
– |
உன்னுடைய |
| இலங்கு பாதம் அன்றி |
– |
ஒளிமிக்க திருவடிகளைத் தவிர |
| மற்று ஓர் பற்று இலேன் |
– |
வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டுக்களில், தாம் வேறுகதியற்றவர் என்னுமிடத்தை வெளியிட்டதுபோல இப்பாட்டில் வேறு உபாயமொன்றுமில்லாகையை வெளியிட்டருள்கிறார். ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமுமாக இரண்டு முண்டாக வேணுமே; அவற்றுள் அநந்யகதித்வ முண்டானமை கீழே சொல்லிற்றாயிற்று. ஆகிஞ்சந்யஞ் சொல்லுகிறது இதில். ஆக இரண்டாலும். உபாயமும் உபேயமும் எம்பெருமானே என்றதாகிறது. ப்ரஹ்ம க்ஷத்ரிய வைச்ய சூத்ரரூபமான நான்கு வருணங்களுள் ஒரு வருணத்திலும் ஜகிக்கப் பெற்றிலேன்; சேதநர்களுடைய அதிகாரங்கட்கும் குணங்கட்கும் தக்கபடி ப்ரியஹிதங்களை விதிக்கும் விலக்ஷணமான சாஸ்த்ரங்களையும் அதிகரிக்கப் பெற்றிலேன்; இந்திரியங்கள் என்னைத் தம் வசமாகப் பிடித்திழுத்துக் கொண்டுபோக நான் அவையிட்ட வழக்காய்த் திரிந்தொழிந்தேனே யொழிய அவற்றிலே ஓர் இந்திரியத்தையும் சிக்ஷிக்க ஸமர்த்தனாகப்பெற்றிலேன்; ஆகவே சப்தாதி விஷயப்ரவணனாய்ப் போந்தேன்; ஆகையாலே ஒருவித உபாயமும் அநுஷ்டிக்கைக்கு அயோக்யனாயிருந்தேனெனும் “உன் திருவடிகளே உபாயம்” என்ற அத்யவஸாயம் மாத்திரம் குறைய்றறரா நின்றது என்கிறார்.
English Translation
Alas, I am not fortunate to hail from well-bred families. O Lord, I am not well-read in the culture of the Vedas-four I have not won over my Five, the sense-pleasures, O Holy One! The only source of life I have is life of service to your feet!
