(841)

(841)

குலங்களாய வீரிரண்டி லொன்றிலும்பி றந்திலேன்

நலங்களாய நற்கலைகள் நாவிலும்ந வின்றிலேன்

புலன்களைந்தும் வென்றிலேன்பொ றியிலேன்பு னிதநின்

இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே.

பதவுரை

புனித

–

பரிசுத்தமான
எம் ஈசனே

–

எம்பெருமானே!
குலங்கள் ஆய ஈர் இரண்டில்

–

(ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள்

ஒன்றிலும்  ஒரு வர்ணத்திலும்

பிறந்திலேன்

–

நான் பிறக்கவில்லை
கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும்

–

(சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும்
நவின்றிலேன்

–

பயிற்சி செய்யவில்லை;
புலன்கள் ஐந்தும்

–

பஞ்சேந்திரியங்களையும்
வென்றிலேன்

–

ஜயிக்கவில்லை.
பொறியிலேன்

–

பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு)
நின்

–

உன்னுடைய
இலங்கு பாதம் அன்றி

–

ஒளிமிக்க திருவடிகளைத் தவிர
மற்று ஓர் பற்று இலேன்

–

வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டுக்களில், தாம் வேறுகதியற்றவர் என்னுமிடத்தை வெளியிட்டதுபோல இப்பாட்டில் வேறு உபாயமொன்றுமில்லாகையை வெளியிட்டருள்கிறார். ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமுமாக இரண்டு முண்டாக வேணுமே; அவற்றுள் அநந்யகதித்வ முண்டானமை கீழே சொல்லிற்றாயிற்று. ஆகிஞ்சந்யஞ் சொல்லுகிறது இதில். ஆக இரண்டாலும். உபாயமும் உபேயமும் எம்பெருமானே என்றதாகிறது. ப்ரஹ்ம க்ஷத்ரிய வைச்ய சூத்ரரூபமான நான்கு வருணங்களுள் ஒரு வருணத்திலும் ஜகிக்கப் பெற்றிலேன்; சேதநர்களுடைய அதிகாரங்கட்கும் குணங்கட்கும் தக்கபடி ப்ரியஹிதங்களை விதிக்கும் விலக்ஷணமான சாஸ்த்ரங்களையும் அதிகரிக்கப் பெற்றிலேன்; இந்திரியங்கள் என்னைத் தம் வசமாகப் பிடித்திழுத்துக் கொண்டுபோக நான் அவையிட்ட வழக்காய்த் திரிந்தொழிந்தேனே யொழிய அவற்றிலே ஓர் இந்திரியத்தையும் சிக்ஷிக்க ஸமர்த்தனாகப்பெற்றிலேன்; ஆகவே சப்தாதி விஷயப்ரவணனாய்ப் போந்தேன்; ஆகையாலே ஒருவித உபாயமும் அநுஷ்டிக்கைக்கு அயோக்யனாயிருந்தேனெனும் “உன் திருவடிகளே உபாயம்” என்ற அத்யவஸாயம் மாத்திரம் குறைய்றறரா நின்றது என்கிறார்.

English Translation

Alas, I am not fortunate to hail from well-bred families. O Lord, I am not well-read in the culture of the Vedas-four I have not won over my Five, the sense-pleasures, O Holy One! The only source of life I have is life of service to your feet!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top