(836)

(836)

நச்சராவ ணைக்கிடந்த நாத.பாத போதினில்

வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்

மெய்த்தன்வல்லை யாதலால றிந்தனன்நின் மாயமே

உய்த்துநின்ம யக்கினில்ம யக்கலென்னை

பதவுரை

நஞ்சு அரா அணை

–

(ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே
கிடந்த

–

திருக்கண் வளர்ந்தருள்கிற
நாத

–

ஸ்வேச்வரனே!
பாத போதினில்

–

(உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே
வைத்த

–

(இப்போது) வைக்கப்பட்டுள்ள
சிந்தை

–

மகஸ்ஸை
வாங்குவித்து

–

அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க

–

வேறு விஷயங்களில் போக்க
நீ

–

ஸ்வதந்த்ரனான நீ
இனம்

–

இன்னமும்
மெய்த்தன்

–

மெய்யாகவே
வல்லை ஆதல்

–

ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை
அறிந்தனன்

–

அறிந்திருக்கிறேன்
மாயனே!

–

ஆச்சரியசக்தியுக்தனே!
என்னை

–

அடியேனை
நின் மாயமே உய்ந்து

–

உன்னுடைய மாயச்செயலையே கடத்தி
மயக்கினில்

–

ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து)
மயக்கல்

–

மயக்கவேண்டா

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியேன் விஷயத்திலே எம்பெருமான் திருவுள்ளம் எப்படிப்பட்டதோ வென்று ஸந்தேஹித்தார் கீழ்ப்பாட்டில்; என்னை உன் ஸ்வாதந்திரியத்தினால் ஸம்ஸாரப்படுகுழியிலே இன்னமும் தள்ளாமல் கிருபைபண்ணியருளவேணுமென்று இரக்கிறார். இப்பாட்டில்

English Translation

O Lord reclining on a snake, O Lord with lotus-flowery feet! You have the power to make my thoughts; you have the power to break my thoughts. You are above my consciousness, I know you now, O Maya Lord! Pray do not trap me once again in web of sense-illusion, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top