(837)

(837)

சாடுசாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்

ஆடராவின் வன்பிடர்ந டம்பயின்றநாதனே

கோடுநீடு கைய செய்ய பாதநாளு முன்னினால்

வீடனாக மெய்செயாத வண்ணமென்கொல் கண்ணனே.

பதவுரை

சாடு நாடு பாதனே

–

சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே!
சலம் கலந்த பொய்கை வாய்

–

(விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே
ஆடு அரவின்

–

(செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய
வன்பிடர்

–

வலியதான பிடரியிலே
நடம் பயின்ற

–

நர்த்தனம் செய்த
நாதனே!

–

ஸ்வாமியே
கோடு நீடு கைய

–

ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால்  நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே!
கண்ணனே

–

கண்ணபிரானே!
செய்ய பாதம்

–

(உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை
நாளும்

–

நாள்தோறும்
உன்னினால்

–

அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது
மெய்

–

மெய்யாகவே
வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல்

–

(அடியேனை) முத்தனாக்காதது ஏனோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் விரோதிநிரஸநத்தில் ஸமர்த்தன் என்னுமிடத்தை நிரூபித்துக் கொண்டு இப்படி ஸமர்த்தனான நீ என் விரோதியை மாத்திரம் நிவர்த்திப்பியாமல் உபேக்ஷை பண்ணுவது தகுதியோவென்கிறார். சலம் கலந்த பொய்கை = அப்பொய்கையிலே விஷமே விஞ்சினதென்றும் அத்தோடு கூட ஜலமும் சிறிது சேர்ந்திருக்குமென்றும் உணர்க. வீடன் = வீட்டையந்தவன், முக்தன்.

English Translation

O Lord, you broke the laden cart, O Lord you went into the lake, O Lord, you put your lotus-feet and danced on hoods of snake in it! O Lord you hold a conch in hand, I think about you constantly, and yet you do not make me free, now how come this O Kanna Lord!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top