திருச்சந்த விருத்தம் திருமொழி – 3

(772)

அரங்கனே! தரங்கநீர்க லங்கவன்று குன்றுசூழ்

மரங்கடேய மாநிலம்கு லுங்கமாசு ணம்சுலாய்

நெருங்கநீ கடைந்தபோது நின்றசூர ரெஞ்செய்தார்

குரங்கையா ளுகந்தவெந்தை கூறுதேற வேறிதே.

விளக்க உரை

(773)

பண்டுமின்று மேலுமாயொர் பாலனாகி ஞாலமேழ்

உண்டுமண்டி யாலிலைத்து யின்றவாதி தேவனே!

வண்டுகிண்டு தண்டுழாய லங்கலாய்! கலந்தசீர்ப்

புண்டரீக பாவைசேரு மார்ப பூமிநாதனே!

விளக்க உரை

(774)

வானிறத்தொர் சீயமாய் வளைந்தவாளெ யிற்றவன்

ஊன்நிறத்துகிர்த்தலம ழுத்தினாய் உலாயசீர்

நால்நிறத்த வேதநாவர் நல்லயோகி னால்வணங்கு

பால்நிறக்க டல்கிடந்த பற்பநாப னல்லையே.

விளக்க உரை

(775)

கங்கைநீர்ப யந்தபாத பங்கயத்தெம் மண்ணலே

அங்கையாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்

சிங்கமாய தேவதேவ தேனுலாவு மென்மலர்

மங்கைமன்னி வாழுமார்ப ஆழிமேனி மாயனே.

விளக்க உரை

(776)

வரத்தினில்சி ரத்தைமிக்க வாளெயிற்று மற்றவன்

உரத்தினில்க ரத்தைவைத்து கிர்த்தலத்தை யூன்றினாய்

இரத்தநீயி தென்னபொய்யி ரந்தமண்வ யிற்றுளே

கரத்திஉன்க ருத்தையாவர் காணவல்லர் கண்ணனே.

விளக்க உரை

(777)

ஆணினோடு பெண்ணுமாகி யல்லவோடு நல்லவாய்

ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்

பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்

காணிபேணும் மாணியாய்க்க ரந்துசென்ற கள்வனே.

விளக்க உரை

(778)

விண்கடந்த சோதியாய்வி ளங்குஞான மூர்த்தியாய்

பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே

எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்

மண்கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.

விளக்க உரை

(779)

படைத்தபாரி டந்தளந்த துண்டுமிழ்ந்து பெளவநீர்

படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்த பெற்றியோய்

மிடைத்தமாலி மாலிமான்வி லங்குகால னூர்புக

படைக்கலம் விடுத்தபல்ப டைத்தடக்கை மாயனே.

விளக்க உரை

(780)

பரத்திலும்ப ரத்தையாதி பெளவநீர ணைக்கிடந்து

உரத்திலும்மொ ருத்திதன்னை வைத்துகந்த தன்றியும்

நரத்திலும்பி றத்திநாத ஞானமூர்த்தி யாயினாய்

ஒருத்தரும்நி னாதுதன்மை யின்னதென்ன வல்லரே.

விளக்க உரை

(781)

வானகம்மும் மண்ணகம்மும் வெற்புமேழ்க டல்களும்

போனகம்செய் தாலிலைத்து யின்றபுண்ட ரீகனே

தேனகஞ்செய் தண்ணறும்ம லர்த்துழாய்நன் மாலையாய்

கூனகம்பு கத்தெறித்த கொற்றவில்லி யல்லையே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top