(780)
பரத்திலும்ப ரத்தையாதி பெளவநீர ணைக்கிடந்து
உரத்திலும்மொ ருத்திதன்னை வைத்துகந்த தன்றியும்
நரத்திலும்பி றத்திநாத ஞானமூர்த்தி யாயினாய்
ஒருத்தரும்நி னாதுதன்மை யின்னதென்ன வல்லரே.
பதவுரை
| நாத |
– |
ஸ்வாமிந்! |
| ஞானம் மூர்த்தி ஆயினாய் |
– |
ஜ்ஞாநஸ்வருபியானவனே! |
| பரத்திலும் பரத்தை ஆகி |
– |
பராத்பரனாயிராநின்றாய். |
| ஒருத்தி தன்னை |
– |
ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை |
| உரத்தில் |
– |
திருமார்பிலே |
| வைத்து |
– |
பிரியாமல் அணையவைத்து |
| உகந்து |
– |
மகிழ்ந்து |
| பௌவம் நீர் அணை கிடந்து |
– |
திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி |
| அது அன்றியும் |
– |
இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல் |
| நரத்திலும் |
– |
ஹேயமான மானிட சாதியிலும் |
| பிறத்தி |
– |
வந்து பிறக்கின்றாய்; |
| நினாது தன்மை |
– |
உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை |
| ஒருத்தரும் |
– |
யாராகிலும் |
| இன்னது என்ன வல்லரே? |
– |
இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மேன்மை எல்லைகாண முடியாதாப்போலே நீர்மையும் எல்லைகாண வொண்ணாதபடி யிருக்குமாற்றை அநுபவித்து ஈடுபடுகிறார். க்ஷீரஸாகரசாயித்வமும் லக்ஷ்மீபதித்வமும் பராத்பரத்வப்ரகாசகமாதலால் “பரத்திலும் பரத்தையாதி” என்றதற்கு உபபாதகமாக அவ்விரண்டையும் அருளிச்செய்தார். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியனத்திற்கு அரும்பதவுரை வரைந்த வொருவர்- “பரத்தையாதி யென்றது- ‘பரத்தையாகி’ என்று பாடமாக வேணுமென்று கண்டு கொள்வது” என்றெழுதிவைத்தது மறுக்கத்தக்கது. ஆதி என்பது ‘ஆ’ என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த நிகழ்கால முன்னிலை யொருமை வினைமுற்று என்பதை அவர் அறிந்திலர். ஆதி= ஆகின்றாய் என்றபடி. பரத்தை = முன்னிலை; படர்க்கையில் பரத்தன் என்றாம். மேற்பட்ட வஸ்துக்களிலும் மேற்பட்ட வஸ்துவாக இராநின்றா யென்கை. நரத்திலும் பிறத்தி = ராமகிருஷ்ணாதிரூபேண மனுஷ்ய ஜாதியிலும் பிறக்கின்டறா யென்கை. நினாது = நினது என்றதன் நீட்டல்.
English Translation
You became the sentient O Lord, you lie on waterbed! You bear the lady-of-the-lotus on your manly chest always. You came in mortal form O Lord and showed the world the path of love. There’s no one who can speak about your qualities as “this and this”.
