(781)
வானகம்மும் மண்ணகம்மும் வெற்புமேழ்க டல்களும்
போனகம்செய் தாலிலைத்து யின்றபுண்ட ரீகனே
தேனகஞ்செய் தண்ணறும்ம லர்த்துழாய்நன் மாலையாய்
கூனகம்பு கத்தெறித்த கொற்றவில்லி யல்லையே.
பதவுரை
| வானகமும் |
– |
வானுலகத்திலுள்ளளாரயும் |
| மண்ணகமும் |
– |
மண்ணுலகத்திலுள்ளாரையும் |
| ஏழ் வெற்பும் |
– |
ஸப்தகுலபர்வதங்களையும் |
| ஏழ் கடல்களும் |
– |
ஸப்தஸாகரங்களையும் |
| போனகம் செய்து |
– |
அமுது செய்து |
| ஆல் இலை துயின்ற |
– |
ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின் |
| புண்டரீகனே! |
– |
தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே! |
| தேன் செய் அகம் |
– |
தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய் |
| தண் |
– |
குளிர்ந்ததாய் |
| நறு |
– |
பரிமளிதமான |
| மலர் துழாய் |
– |
திருத்துழாயை |
| கல் மாலையாய்! |
– |
நல்லமாலையாக அணிந்தவனே! (நீ) |
| கூன் |
– |
(கூனியினுடைய) கூனானது |
| அகம் புக |
– |
உள்ளே யொடுங்கும்படி |
| தெறித்த |
– |
விட்டெறிந்த |
| கொற்றம் வில்லி அல்லையே |
– |
வெற்றி வில்லை யுடையவனான்றோ |
English Translation
The Earth and Sky and all seven – the oceans and the mountains high, you swallowed all and lay asleep a-float on fig leaf, Lotus-Lord! You wear a garland of the nectar – laden sacred Basil leaf; you shot an arrow joyfully, bending Kuni’s humpy back!
