(782)

(782)

காலநேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்

ஞாலமேழு முண்டுபண்டோர் பாலனாய பண்பனே

வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீரநின்

பாலராய பத்தர்சித்தம் முத்திசெய்யும் மூர்த்தியே.

பதவுரை

காலநேமி காலனே!

காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே!
கணக்கு இலாத கீர்த்தியாய்

எண்ணிறந்த புகழையுடையவனே!
பண்டு

முன்பொருகால் (ப்ரளய காலத்திலே)
ஞாலம் எழும் உண்டு

ஏழுலகங்களையும் அமுது செய்து
பாட்டு

மின்னறதெயிற்றரக்கன் வீழ
ஓர் பாலன் ஆய

ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த
பண்பனே!

ஆச்சர்யபூதனே
வேலைவேவ

கடல்நீர் வெந்து போம்படி
வில்வளைத்த

வில்லை வளைத்த.
வெல் சினத்த  வீர!

எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே!
நின்பாலர் ஆய பக்தர் சித்தம்

உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி
முத்தி செய்யும்

(அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற
மூர்த்தியே!

ஸ்வாமியே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காலநேமி என்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன். வேலை- கடற்கரைக்குப் பெயர்; இலக்கணையால் கடல்நீரைக் குறிக்கும்.

வெல்சினந்தவீர! = சிலருடைய கோபம் காலக்ரமத்தில் தன்னுடையே சாந்தமாவதுண்டு; அங்ஙனன்றியே ஸமுத்ரராஜன்மீது பெருமாளுக்குண்டான கோபம் வெல்சினமாய்த்து; வென்றாலன்றித் தீராத பாதச்சாசையிலே ஒதுங்கிவர்த்திக்கிற பக்தர்கள் என்கை. முத்திசெய்தல்- வேறு விஷயங்களில் ஆசையற்றதாகச் செய்தல். மூர்த்தி- ஸ்வாமி; திவ்யமங்கள விக்ரஹமாகவுமாம்; வடிவழகைக் காட்டித் தன்பக்கல் ஆழங்காற்படுத்திக் கொள்ளுமவனே! என்றவாறு.  (கூக)

English Translation

O Lord of countless qualities, O Kalanemi-killer Lord! O Lord who swallowed all the worlds, O Child asleep on Banyan leaf! In anger, Lord, you shot the bow whose arrow dried the ocean-deep. You make devotees come to you with love and sing your praise in joy!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top